• Login
Wednesday, March 25, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

யுகரிஷியின் ஆன்மிகச் சிந்தனைகள் – அத்தியாயம் 92

GenevaTimes by GenevaTimes
June 24, 2024
in இலங்கை
Reading Time: 1 min read
0
யுகரிஷியின் ஆன்மிகச் சிந்தனைகள் – அத்தியாயம் 92
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சுகபோக வாழ்க்கைக்கு முக்கியத்துவம் கொடுத்தால், முக்திக்கான வாழ்க்கை எட்டாக் கனியாகிவிடும். பசிக்கு உணவு, உடம்பை மறைப்பதற்குத் துணி, என்று வாழ்ந்து சுகபோகங்களை துறந்தால், முக்திக்கான வாழ்க்கை நம் எதிரில் நிற்கும். ஆண்டவன் உலகை படைத்த நாள் முதல், இன்றளவும் ஒவ்வொரு மேன்மையானவரின் சரித்திரம் இதுவே. சுகபோகங்களை துறந்து, தியாக வாழ்க்கையை மேற்கொள்வது மேன்மையை அடைவதற்கான வழியாகும். ஆத்ம முன்னேற்றத்திற்கு இது ஒன்றே சிறந்த வழியாகும்.

தீர்த்தயாத்திரை மூலமோ, விரதம் இருப்பதாலோ, யோகப் பயிற்சி, மூச்சு பயிற்சி செய்வதாலோ, மனம், உடல் ஆகியவை வலுப் பெறுமே தவிர, கடவுளை அடைய முடியாது. கடவுளை வயப்படுத்த, மன உறுதி, மனக்கட்டுப்பாடுடன் கூடிய, செயலில் வெற்றி கொள்ளத் தக்க, சாதனாவின் மூலம் மட்டுமே இயலும். தனிமனித வாழ்வில் பிறருக்கு முன் உதாரணமாக வாழ்ந்தவர்கள் போற்றத் தகுந்தவர்களாக இருந்திருக்கிறார்கள். அவர்கள் மூலமே உலகத்தில் மக்கள் நலம் உண்டாகியுள்ளது. எனவே நாம் மன பலம் படைத்தவர்களாகவும் ஆத்ம பலம் படைத்தவர்களாகவும் மாறுவோமாக.

இன்றைய உலகம் மூடத்தனம் மற்றும் மூட நம்பிக்கை என்னும் சங்கிலிகளால் இறுக்கப்பட்டுள்ளது. இச்சங்கிலியில் கட்டுப்பட்டு கிடக்கும் மாந்தரை நினைத்தால் என் மனம் துடிக்கிறது. ஒவ்வொரு மனிதனின் துன்பத்திற்கும், சமுதாயத்தின் இந்த அவல நிலைக்கும் மக்களின் மூட நம்பிக்கை தான் காரணமென, கிழக்கில் உதிக்கும் சூரியன் போல் தெள்ளத் தெளிவாக எனக்குத் தெரிகிறது.

உலகில் எங்கிருந்து ஒளி பிறக்கும்? தியாகத்தினால் மட்டுமே இது நிறைவேறும். தியாக உள்ளம் கொண்ட வீரன் மற்றவர்க்கு முன்னுதாரணமாய்த் திகழ்கிறான். பின்னர் பலரும் அவனின் அடிச்சுவட்டைப் பின்பற்றுகின்றனர். வெளிச்சத்தை உருவாக்கும் இந்த தியாக வீரர்களின் செயல், ஆதிகாலத்திலிருந்தே நடந்து வருகிறது. இப்பூவுலகில் பற்பல வீரர்கள், உத்தமர்கள், புனிதர்கள், மஹாத்மாக்கள் தோன்றியுள்ளனர்.

அவர்கள் யாவரும் தியாக வாழ்க்கை மேற்கொண்டு வாழ்ந்து காட்டினர். நம் சுகபோகங்ளை துறந்தால் தான், மற்றவர்களுக்கு சுகங்களை நாம் வழங்க முடியும். அதற்கான வழியைக் காட்ட முடியும். உண்மையான அன்பு எல்லையில்லா கருணை கொண்ட இதயங்கள் துணிச்சலுடன் செயலாற்றுபவர்கள், எந்தளவிற்கு இன்றைய நாளில் தேவைப் படுகிறதோ, அந்தளவிற்கு வேறு எந்த காலத்திலும் தேவைப்பட்டதில்லை.

The post யுகரிஷியின் ஆன்மிகச் சிந்தனைகள் – அத்தியாயம் 92 appeared first on Thinakaran.

Read More

Previous Post

கார் ஓட்டும்போது மாரடைப்பு ஏற்பட்ட ஆடவர் மரணம் | Makkal Osai

Next Post

Tamil Nadu Assembly: 10.5% வன்னியர் இட ஒதுக்கீடு! திமுக-பாமக இடையே காரசார விவாதம்! முதல்வர் பதில்! வெளிநடப்பு!

Next Post
Tamil Nadu Assembly: 10.5% வன்னியர் இட ஒதுக்கீடு! திமுக-பாமக இடையே காரசார விவாதம்! முதல்வர் பதில்! வெளிநடப்பு!

Tamil Nadu Assembly: 10.5% வன்னியர் இட ஒதுக்கீடு! திமுக-பாமக இடையே காரசார விவாதம்! முதல்வர் பதில்! வெளிநடப்பு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin