• Login
Saturday, March 14, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

யுஎஸ் ஓபன் இன்று தொடக்கம்: ரூ.747 கோடி பரிசுத் தொகை | us open tennis grand slam starts today

GenevaTimes by GenevaTimes
August 24, 2025
in விளையாட்டு
Reading Time: 5 mins read
0
யுஎஸ் ஓபன் இன்று தொடக்கம்: ரூ.747 கோடி பரிசுத் தொகை | us open tennis grand slam starts today
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


நியூயார்க்: ஆண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரான யுஎஸ் ஓபன் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இன்று (24-ம் தேதி) தொடங்குகிறது. யுஎஸ் ஓபன் வரலாற்றில் ஓபன் ஏராவில் ஞாயிற்றுக்கிழமை போட்டி தொடங்குவது இதுவே முதன்முறையாகும். மேலும் இம்முறை போட்டிகள் மொத்தம் 15 நாட்கள் நடைபெறுகின்றன. வழக்கமாக இந்த தொடர் 14 நாட்களில் நடத்தி முடிக்கப்படும்.

நடப்பு சாம்பியனும், முதல் நிலை வீரருமான இத்தாலியின் ஜன்னிக் சின்னர், 2-ம் நிலை வீரரான ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸ், 24 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்று குவித்துள்ள செர்பியாவின் நோவக் ஜோகோவிச், முன்னாள் சாம்பியனான ரஷ்யாவின் டேனியல் மேத்வதேவ், அமெரிக்காவின் முன்னணி வீரர்களான பென் ஷெல்டன், டெய்லர் ஃபிரிட்ஸ், பிரான்சஸ் தியாஃபோ உள்ளிட்ட நட்சத்திரங்கள் பலர் பட்டம் வெல்ல மோதுகின்றனர்.

மகளிர் பிரி​வில் நடப்பு சாம்​பிய​னான பெலாரஸின் அரினா சபலென்​கா, இந்த ஆண்​டில் இரு கிராண்ட் ஸ்லாம் பட்​டங்​கள் வென்​றுள்ள அமெரிக்​கா​வின் கோ கோ காஃப், ஜெசிகா பெகுலா, மேடிசன் கீஸ், இங்​கிலாந்​தின் எம்மா ரடு​கானு, எம்மா நவர்​ரோ, இத்​தாலி​யின் ஜாஸ்​மின் பவுலினி, ரஷ்​யா​வின் மிர்ரா ஆன்ட்​ரீ​வா, போலந்​தின் இகா ஸ்வி​யாடெக், ஜப்​பானின் நவோமி ஒசாகா உள்​ளிட்​டோர் பட்​டம் வெல்ல மல்​லுக்​கட்ட உள்​ளனர்.

தொடக்க நாளான இன்று நட்​சத்​திர வீரர், வீராங்​க​னை​கள் பலர் முதல் சுற்​றில் களமிறங்​கு​கின்​றனர். 6-ம் நிலை வீர​ரான அமெரிக்​கா​வின் பென் ஷெல்​டன், தரவரிசை​யில் 136-வது இடத்​தில் உள்ள பெரு வீரர் இக்​னாசி​யோவுடன் மோதுகிறார். 4 முறை சாம்​பிய​னான செர்​பி​யா​வின் நோவக் ஜோகோ​விச், 19 வயதான அமெரிக்​கா​வின் லர்​னர் டியனை எதிர்​கொள்​கிறார்.

4-ம் நிலை வீர​ரான அமெரிக்​கா​வின் டெய்​லர் ஃபிரிட்​ஸ், சகநாட்​டைச் சேர்ந்த 101-ம் நிலை வீர​ரான எமிலியோ நவாவுடன் மோதுகிறார். 2021-ம் ஆண்டு சாம்​பிய​னான ரஷ்​யா​வின் டேனியல் மேத்​வ​தேவ், பிரான்​ஸின் பெஞ்​ஜமின் போன்​ஸியை எதிர்​கொள்​கிறார். இதற்கு முன்​னர் இரு​வரும் 2 முறை மோதி உள்​ளனர். இதில் இரண்​டிலும் போன்ஸி வெற்றி பெற்​றிருந்​தார்.

2022-ம் ஆண்டு சாம்​பியனும் 2-ம் நிலை வீரரு​மான ஸ்பெ​யினின் கார்​லோஸ் அல்​க​ராஸ், அமெரிக்​கா​வின் 66-ம் நிலை வீர​ரான ரெய்லி ஒபெல்கா​வுடன் மோதுகிறார். 5-ம் நிலை வீர​ரான இங்​கிலாந்​தின் ஜாக் டிராப்​பர், 206-ம் நிலை வீர​ரான அர்​ஜென்​டி​னா​வின் ஃபெடரிகோ அகஸ்​டின் கோம்​ஸுடன் பலப்​பரீட்சை நடத்​துகிறார்.

மகளிர் ஒற்​றையர் பிரி​வில் நடப்பு சாம்​பிய​னான பெலாரஸின் அரினா சபலென்​கா, 109-ம் நிலை வீராங்​க​னை​யான சுவிட்​சர்​லாந்​தின் ரெபேக்கா மசரோ​வாவுடன் மோதுகிறார். 2021-ம் ஆண்டு சாம்​பிய​னான இங்​கிலாந்​தின் எம்மா ரடு​கானு, தகுதி நிலை வீராங்​க​னை​யான ஜப்​பானின் எனா ஷிபஹா​ராவை எதிர்​கொள்​கிறார்.

4-ம் நிலை வீராங்​க​னை​யான அமெரிக்​கா​வின் ஜெசிகா பெகுலா, 104-ம் நிலை வீராங்​க​னை​யான எகிப்​தின் மாயர் ஷெரிப்​புடன் மோதுகிறார். 7-ம் நிலை வீராங்​க​னை​யான இத்​தாலி​யின் ஜாஸ்​மின் பவுலினி, 168-ம் நிலை வீராங்​க​னை​யான ஆஸ்​திரேலி​யா​வின் டெஸ்​டானி ஐயா​வாவுட​னும், 10-ம் நிலை வீராங்​க​னை​யான அமெரிக்​கா​வின் எம்மா நவர்​ரோ, 202-ம் நிலை வீராங்​க​னை​யான சீனா​வின் யாஃ​பான் வாங்​குட​னும் மோதுகின்​றனர்.

5-ம் நிலை வீராங்​க​னை​யான ரஷ்​யா​வின் மிர்ரா ஆன்ட்​ரீ​வா, 71-ம் நிலை வீராங்​க​னை​யான அமெரிக்​கா​வின் அலிசியா பார்க்​ஸுட​னும், 6-ம் நிலை வீராங்​க​னை​யான அமெரிக்​கா​வின் மேடிசன் கீஸ், 73-ம் நிலை வீராங்​க​னை​யான மெக்​சிகோ​வின் ரெனாட்டா ஜராசு​வாவுட​னும் மோத உள்​ளனர்.

யுஎஸ் ஓபன் தொடரில் இம்​முறை பரிசுத் தொகை அதி​கரிக்​கப்​பட்​டுள்​ளது. இந்​தத் தொடரின் மொத்த பரிசுத் தொகை ரூ.747 கோடி​யாகும். இது கடந்த ஆண்டு பரிசுத் தொகையை விட 20 சதவீதம் அதி​க​மாகும். இதன் மூலம் மற்ற கிராண்ட் ஸ்லாம் தொடரை விட அதிக பரிசுத் தொகை வழங்​கும் தொட​ராக வரலாற்று சாதனை படைக்க உள்​ளது யுஎஸ் ஓபன் கிராண்ட் ஸ்லாம் தொடர். ஏனெனில் ஆஸ்​திரேலிய ஓபன் தொடரின் பரிசுத் தொகை ரூ.717 கோடி​யாக​வும், பிரெஞ்சு ஓபன் பரிசுத் தொகை ரூ.476 கோடி​யாக​வும், விம்​பிள்​டன் பரிசுத் தொகை ரூ.551 கோடி​யாக​வும் மட்​டுமே உள்​ளது.

இம்​முறை யுஎஸ் ஓபன் ஒற்​றையர் பிரி​வில் சாம்​பியன் பட்​டம் வெல்​பவருக்கு ரூ.41.5 கோடி பரிசுத் தொகை கிடைக்​கும். இறு​திப் போட்​டி​யில் தோல்​வியை சந்​திப்​பவர் ரூ.20.75 கோடியை பரி​சாக பெறு​வார். அரை இறு​தி​யில் தோல்வி அடைபவர்​கள் தலா ரூ.10.37 கோடியை​யும்​, ​கால்​ இறுதி சுற்​றுடன்​ வெளி​யேறு​பவர்​கள்​ ரூ.4.15 கோடியை​யும்​ பெறு​வார்​கள்​. முதல்​ சுற்​று முதல்​ ​கால்​ இறு​திக்​கு முந்​தைய சுற்​று வரை தோல்​வி அடைந்​து வெளி​யேறு​பவர்​களும்​ கணிச​மான பரிசுத்​ தொகையை பெறு​வார்​கள்​.



Read More

Previous Post

ஸ்பைடர்மேன் உடையணிந்து பைக் சாகசம்! ரூ.15,000 அபராதம் விதித்த காவல் துறை!

Next Post

ஐசிஎஃப்-ல் தயாரிக்கப்பட்ட நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயில் – ஹரியாணாவுக்கு அனுப்பி வைப்பு | India’s First Hydrogen Train Produced on ICF – Sent to Haryana

Next Post
ஐசிஎஃப்-ல் தயாரிக்கப்பட்ட நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயில் – ஹரியாணாவுக்கு அனுப்பி வைப்பு | India’s First Hydrogen Train Produced on ICF – Sent to Haryana

ஐசிஎஃப்-ல் தயாரிக்கப்பட்ட நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயில் - ஹரியாணாவுக்கு அனுப்பி வைப்பு | India's First Hydrogen Train Produced on ICF - Sent to Haryana

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin