யாழ்ப்பாணம் (Jaffna) – பருத்தித்துறை வல்லிபுரம் ஆலயத்திற்கு முன்பாக இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
பொன்னையா தேவராசா என்கின்ற 64 வயதுடைய வல்லிபுர கோவிலடியை
சேர்ந்தவர் படுகாயமடைந்துள்ளார்.
இந்நிலையில், அவர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக
சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
தேடும் நடவடிக்கை
இதேவேளை விபத்தை ஏற்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் மகேந்திரா ரக வாகனம் தப்பிச் சென்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் குறித்த வாகனத்தை தேடும் நடவடிக்கையில் பருத்தித்துறை காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |