பாராளுமன்றத் தேர்தலில் யாழ்ப்பாணம் மாவட்ட வாக்குப் பதிவில் தேசிய மக்கள் சக்தி எதிர்பாராத வெற்றியைப் பதிவுசெய்துள்ளது.
இந்தத் தேர்தல் மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி 9,066 வாக்குகளையும், இலங்கை தமிழ் அரசு கட்சி 2,582 வாக்குகளையும், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 1,612 வாக்குகளையும் பெற்றுள்ளன. அத்துடன் தேசிய மக்கள் சக்தி 03 ஆசனங்களை பெற்றுள்ளது. கருணைநாதன் இளங்குமரன் – 32,102 விருப்பு வாக்குகளையும் சண்முகநாதன் ஸ்ரீ பவானந்தராஜா – 20,430 விருப்பு வாக்குகளையும் ஜெயச்சந்திரமூர்த்தி ரஜீவன் – 17,579 விருப்பு வாக்குகளையும் பெற்று வெற்றி பெற்றுள்ளனர்.
வடக்கில் நடைபெறும் தேர்தல்களில் விசேடமாக யாழ்ப்பாணத்திலுள்ள தமிழ் மக்கள், தேர்தல்களின்போது இலங்கை தமிழ் அரசு கட்சி மீது நம்பிக்கை வைத்து அக்கட்சிக்கே வாக்களித்து வந்தனர்.
ஆனால், தற்போது அதற்கு பதிலாக மாற்றத்துக்காக வாக்களிக்க முடிவு செய்திருப்பதை இந்த வெற்றி எடுத்துக்காட்டியிருப்பதாக அரசியல் தரப்பில் பலராலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
The post யாழ். வரலாற்றில் முதற் தடவையாக தேசிய மக்கள் சக்தி வெற்றிவாகை appeared first on Thinakaran.
