யாழ்ப்பாண மாவட்டத்திற்கு தேவையான பெட்ரோல் கையிருப்பில் உள்ளதால் மக்கள்
பீதியடையத் தேவையில்லை எனவும், செயற்கைத் தட்டுப்பாட்டை தவிர்க்கும்மாறும்
யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் பொதுமக்களுக்கு
அறிவித்துள்ளார்.
மேலும் காங்கேசன்துறையிலுள்ள பெட்ரோல் களஞ்சியமானது வழமைபோல்
ஞாயிற்றுக்கிழமை மூடப்படுவதால் சகல எரிபொருள் நிலையங்களுக்கும் நாளை மறுதினம்
திங்கட்கிழமையிலிருந்து பெட்ரோல் விநியோகிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
ஒரு மாதத்திற்கான பெட்ரோல் கையிருப்பில்
மேலும், இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபன தலைவர் டி. ஜே. ஏ. எஸ். டி.
எஸ். ராஜபக்சவுடன் இன்றையதினம் தொலைபேசி மூலம் தாம் தொடர்புகொண்ட போது,
நாட்டுக்குத் தேவையான ஒரு மாதத்திற்கான பெட்ரோல் கையிருப்பில் இருப்பதாக
தம்மிடம் தெரிவித்துள்ளார் என்பதனை அரசாங்க அதிபர் பொதுமக்களுக்கு
தெரியப்படுத்தியுள்ளார்.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

