யாழ்ப்பாணத்தில் உள்ள 17 உள்ளூராட்சி சபைகளிலும் தேசிய மக்கள் சக்தி ஆட்சி அமைக்கும் என்று கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்காக யாழ்ப்பாணத்தில் உள்ள 17 உள்ளூராட்சி சபைகளுக்குமான கட்டுப்பணம் செலுத்துவதற்காக தேர்தல்கள் அலுவலகத்துக்கு நேற்று வருகை தந்த போதே அவர் தெரிவித்துள்ளார். (a)