• Login
Friday, May 8, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

யாழ் பாடசாலையில் பரீட்சை விடைத்தாள் திருத்தத்தில் சர்ச்சை : ஆசிரியருக்கு நேர்ந்த கதி

GenevaTimes by GenevaTimes
March 28, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
யாழ் பாடசாலையில் பரீட்சை விடைத்தாள் திருத்தத்தில் சர்ச்சை : ஆசிரியருக்கு நேர்ந்த கதி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


யாழ்ப்பாணம் (Jaffna) – பருத்தித்துறையில் ஆரம்பப் பாடசாலை பாடசாலை மாணவி ஒருவரை தடியால் அடித்தமைக்காக ஆசிரியர் ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், “குறித்த பாடசாலையில் ஐந்தாம் தரத்தில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு நேற்று
முன்தினம் (26) பரீட்சை நடத்தப்பட்டுள்ளது.

குறித்த பரீட்சை விடைத்தாள்கள் சக மாணவர்களைக் கொண்டு ஒருவர் மாறி ஒருவரால் திருத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விடைத்தாள் திருத்தம்


இதன்போது பாதிக்கப்பட்ட குறித்த மாணவி தனது விடைத்தாளினை திருத்திய மாணவியிடம்,
விடைத்தாளில் பிழையான விடை காணப்பட்டால் அவற்றை சரியாக்கி அதிக மதிப்பெண்
வரும் வகையில் செய்யுமாறு கேட்டுள்ளார்.

யாழ் பாடசாலையில் பரீட்சை விடைத்தாள் திருத்தத்தில் சர்ச்சை : ஆசிரியருக்கு நேர்ந்த கதி | Teacher Arrested For Exam Answer Sheet Issue

அதற்கேற்றவாறே அந்த மாணவியும் பிழையான
விடைகள் எழுதப்பட்ட போதிலும் சரியானதை குறிப்பிட்டு அதிக மதிப்பெண்ணை வழங்கியுள்ளார்.


இவற்றை அவதானித்துக்கொண்டிருந்த ஆசிரியர் விடைத்தாளினை பார்வையிட்ட போது
மேற்குறித்த விடயம் உறுதிப்படுத்தப்பட்டு திருத்திய மாணவியை விசாரித்த
நிலையில் அவரும் சக மாணவியின் அறிவுறுத்தலில் தான் அவ்வாறு செய்ததாக
தெரிவித்துள்ளார்.

இதனையயடுத்து முறைகேடான வகையில் மதிப்பெண்களை அதிகமாக போடுமாறு சக மாணவியை
அறிவுறுத்திய மாணவியை அழைத்து இவ்வாறு செய்வது தவறு என சுட்டிக்காட்டியதுடன்
கண்டிக்கும் வகையில் மெதுவாக அடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை

மேலும், குறித்த மாணவி, ஆசிரியரால் தாக்கப்பட்டதாக கூறி அவரது
பெற்றோரால் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் நேற்று முன்தினம் (26)
சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

யாழ் பாடசாலையில் பரீட்சை விடைத்தாள் திருத்தத்தில் சர்ச்சை : ஆசிரியருக்கு நேர்ந்த கதி | Teacher Arrested For Exam Answer Sheet Issue

இந்த நிலையில் சிகிச்சை பெறும் அளவுக்கு பாதிப்புகள்
எவையும் இல்லாத நிலையில் மாணவியை வைத்தியசாலையில் இருந்து விடுவித்ததாக
தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் குறித்த விடயம் தொடர்பில் ஆசிரியருக்கு எதிராக மாணவியின்
தாயாரினால் பருத்தித்துறை காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

பருத்தித்துறை நீதிமன்றத்தில் முன்னிலை

குறித்த
முறைப்பாட்டின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட ஆசிரியரை நேற்றைய தினம் கைது செய்த
பருத்தித்துறை காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டனர்.

யாழ் பாடசாலையில் பரீட்சை விடைத்தாள் திருத்தத்தில் சர்ச்சை : ஆசிரியருக்கு நேர்ந்த கதி | Teacher Arrested For Exam Answer Sheet Issue


இதனையடுத்து நேற்று (27) மாலை குறித்த வகுப்பில் கல்வி கற்கும் ஏனைய மாணவர்களது பெற்றோர்
ஆசிரியருக்கு ஆதரவாக பருத்தித்துறை காவல் நிலையத்திற்கு முன்பாக ஒன்று கூடியிருந்தனர்.

பாடசாலை அதிபர் ஊடாக பருத்தித்துறை காவல் நிலைய
தலைமை அதிகாரி விடுத்த அறிவுறுத்தலை அடுத்து நேற்று இரவு 8 மணி அளவில்
ஆசிரியருக்கு ஆதரவாக திரண்ட பெற்றோர் அங்கிருந்து கலைந்து சென்றிருந்தனர்.


இதன் பின்னர் குறித்த ஆசிரியரை காவல்துறை காவலில் வைத்துள்ள நிலையில்
இன்றைய தினம் (28) பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில்
முற்படுத்த காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

செய்திகள் – த.பிரதீபன் 

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!    

Read More

Previous Post

லோரி டயர் வெடித்து வாகனங்கள் மீது மோதியதில் 5 பேர் பலி; எட்டு பேர் காயம் | Makkal Osai

Next Post

Tamil Live Breaking News : தவெக பொதுக்குழுவில் 17 தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகிறது

Next Post
Tamil Live Breaking News : தவெக பொதுக்குழுவில் 17 தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகிறது

Tamil Live Breaking News : தவெக பொதுக்குழுவில் 17 தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகிறது

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin