யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக, தற்போதைய உயர்பட்டப்
படிப்புகள் பீடாதிபதியும், கணக்கியலில் சிரேஷ்ட பேராசிரியருமான தி. வேல்நம்பி
நாளை(24) புதன்கிழமை பதவி ஏற்கவுள்ளார்.
பல்கலைக்கழகத்தினுள் அமைந்துள்ள ஶ்ரீ பார்வதி சமேத பரமேஸ்வரன் ஆலயத்தில்
நடைபெறவுள்ள விசேட அபிஷேக, ஆராதனைகளைத் தொடர்ந்து, முற்பகல் 9:30 மணிக்கு
துணைவேந்தர் அலுவலகத்தில் அவர் உத்தியோகபூர்வமாகத் தனது கடமைகளைப்
பொறுப்பேற்கவுள்ளார் என்று பதிவாளர் வி. காண்டீபன் அறிவித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

