• Login
Saturday, March 28, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

யாழ். பருத்தித்துறையில் வெடித்த போராட்டம்..! முடங்கிய நகரம் : கையளிக்கப்பட்ட மகஜர்

GenevaTimes by GenevaTimes
October 24, 2025
in இலங்கை
Reading Time: 2 mins read
0
யாழ். பருத்தித்துறையில் வெடித்த போராட்டம்..! முடங்கிய நகரம் : கையளிக்கப்பட்ட மகஜர்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

புதிய இணைப்பு

பருத்தித்துறை மரக்கறி சந்தையினை இடமாற்றுமாறு வலியுறுத்தி பருத்தித்துறை வர்த்தக
சங்கத்தினரால் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்ட நிலையில் பேரணியாக சென்று பருத்தித்துறை நகர சபையில் மகஜர் கையளிக்கப்பட்டது.

பருத்தித்துறை நகரசபை தவிசாளர் வின்சென் டீ போல் டக்ளஸ் போல் மற்றும் செயலாளர்
தாரணி கஜரூபன் ஆகியோரிடம் குறித்த மகஜர் கையளிக்கப்பட்டது.

பருத்தித்துறை நவீன சந்தை கட்டடத் தொகுதிக்கு முன்பாக இன்று காலை 8.30
மணியளவில் ஆரம்பமான கவனயீர்ப்பு போராட்டத்தின் போது பங்கேற்ற வர்த்தகர்கள்,
பொதுமக்கள் உள்ளிட்டோரிடம் கையெழுத்து பெறப்பட்டு 9.00 மணியளவில் பேரணியாக
புறப்பட்டு பருத்தித்துறை நகரசபையை சென்றடைந்து கோசங்கள் எழுப்பி போராட்டம்
இடம்பெற்றது.

யாழ். பருத்தித்துறையில் வெடித்த போராட்டம்..! முடங்கிய நகரம் : கையளிக்கப்பட்ட மகஜர் | Ppt City Closed And The Rally Is Taking Place

தொடர்ந்து காலை 10.00 மணியளவில் பருத்தித்துறை வர்த்தகர் சங்க பிரதிநிகளினால்
நகர சபை தவிசாளர் மற்றும் செயலாளர் ஆகியோரிடம் மகஜரை கையளித்தனர்.

இக்கவனயீர்ப்பு போராட்டத்தில் வர்த்தகர்கள், பருத்தித்துறை நகர் முச்சக்கர
வண்டி சேவை சங்கத்தினர், மரக்கறி வியாபாரிகள், பொதுமக்கள் என
நூற்றுக்கணக்கானவர்கள் பங்கேற்றிருந்தனர்.

இந்தநிலையில் நகர சபை செயலாளர் வெளியே வர மறுத்த நிலையில் நகரசபை வாயிலில் மறியல் போராட்டம்
நடத்தப்பட்டதுடன் மரக்கறி வியாபாரி ஒருவர் செயலாளர் வெளியே வந்து மக்களை
சந்திக்காவிட்டால் தீக்குளிக்கப் போவதாக தெரிவித்திருந்தார்.

இதையடுத்து செயலாளர் வெளியே வந்து தவிசாளருடன் இணைந்து மகஜரினை
பெற்றுக்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

மேலதிக செய்திகள் – த.பிரதீபன்

முதலாம் இணைப்பு

யாழ்ப்பாணம் (Jaffna) – பருத்தித்துறை மரக்கறி சந்தையை பழைய இடத்திற்கு மாற்றகோரி வர்த்தகர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பருத்தித்துறை வர்த்தக சங்கத்தினர் மற்றும் மரக்கறி சந்தை வியாபாரிகள் இணைந்து இன்று (24) காலை 8:30 மணியளவில் பருத்தித்துறை நகரில் கவனயீர்ப்பு போராட்டத்தை
ஆரம்பித்துள்ளனர்.

நகரின் மையப் பகுதியில் அமைந்திருந்த மரக்கறிச் சந்தையை , மீன் சந்தை வீதியில்
புதிதாக கட்டடம் ஒன்றை நிர்மாணித்து அங்கு வியாபாரிகளை பருத்தித்துறை நகரசபை
செயலாளர் தலைமையில் மாற்றம் செய்து வைக்கப்பட்டது.

வியாபாரிகள் பல தடவை போராட்டம்

ஆனாலும் புதிய சந்தைக் கட்டிடம் போதிய இடவசதிகளோ அல்லது போக்குவரத்து வசதிகள் குறைந்தவையாகவும், மழை நேரங்களில் வெள்ளம் தேங்கி நிற்பதாகவும், நகரில் இருந்து மரக்கறிச் சந்தை தூரம் என்பதால் பொதுமக்கள் சந்தையை நாடுவது குறைவு.

யாழ். பருத்தித்துறையில் வெடித்த போராட்டம்..! முடங்கிய நகரம் : கையளிக்கப்பட்ட மகஜர் | Ppt City Closed And The Rally Is Taking Place

ஆகையால் எமது வியாபார நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக மரக்கறி வியாபாரிகள்
பல தடவை போராட்டம் நடாத்தி நகரசபை தவிசாளர் உள்ளிட்டோரிடம் மகஜர்களை
கையளித்திருந்தனர்.

வியாபாரிகளின் கோரிக்கைக்கு அமைய நகரசபை அமர்வின் போது நிபுனர்குழு ஒன்று
உருவாக்கப்பட்டு ஆராய்ந்து முடுவெடுப்பதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது.

புதிய மரக்கறிச் சந்தை

ஆனாலும் இதுவரை வியாபாரிகளின்்கோரிக்கைகள் நிறைவேற்றுப்படாத விடத்து மரக்கறி
வியாபாரிகள் மற்றும் வர்த்தகர்கள் இணைந்து போராட்டத்தை நடாத்திவருகின்றனர்.

யாழ். பருத்தித்துறையில் வெடித்த போராட்டம்..! முடங்கிய நகரம் : கையளிக்கப்பட்ட மகஜர் | Ppt City Closed And The Rally Is Taking Place

ஆனாலும் சில மரக்கறி வியாபாரிகள் புதிய மரக்கறிச் சந்தை தமக்கு திருப்திகரமாக
இருப்பதாகத் தெரிவித்து வியாபார நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதையும் அவதானிக்க
முடிகிறது.

செய்திகள் – பிரதீபன் மற்றும் பூ.லின்ரன் 

யாழ். பருத்தித்துறையில் வெடித்த போராட்டம்..! முடங்கிய நகரம் : கையளிக்கப்பட்ட மகஜர் | Ppt City Closed And The Rally Is Taking Place

யாழ். பருத்தித்துறையில் வெடித்த போராட்டம்..! முடங்கிய நகரம் : கையளிக்கப்பட்ட மகஜர் | Ppt City Closed And The Rally Is Taking Place

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!    

Read More

Previous Post

சீனப் பள்ளி அரங்குகளுக்கு மது விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக அறிக்கை கூறுகிறது | Makkal Osai

Next Post

அரசு பள்ளி கட்டிடம் சேதம்: பிரியங்கா காந்தி கோரிக்கை | Priyanka Gandhi demands over damaged government school building

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In