யாழ் நகரில் கடந்த 48 மணித்தியாலங்களில் 13 பேர் போதைப்பொருட்களுடன் கைது
செய்யப்பட்டனர்.
யாழ்ப்பாணம் தலைமையக போதைப்பொருள் தடுப்பு காவல்துறையினர் நடத்திய சோதனை
நடவடிக்கைகளின் போது இந்த கைது முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது ஹெரோயின், போதை மாத்திரைகள் என்பன காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டது.
கைதானவர்களிடம் நடத்தப்படும் மேலதிக விசாரணை
கைதானவர்களிடம் நடத்தப்படும் மேலதிக விசாரணைகளுக்கு பின்னர் சந்தேக நபர்களை
யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்த காவல்துறையினர் நடவடிக்கை
எடுத்துள்ளனர்.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

