கொழும்பு – காங்கேசன்துறை இடையிலான தொடருந்து கடந்த 20 ஆம் திகதி பழுதடைந்ததற்கு தொடருந்தின் இயந்திரம் மோசமான நிலையில் இருந்ததே காரணம் என நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தை போக்குவரத்து பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன நாடாளுமன்றத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் கவிந்த ஜயவர்தன எழுப்பிய வாய்மூலக் கேள்விக்கு பதிலளித்தபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.
மோசமான நிலையில் இயந்திரங்கள்
தற்போது சேவையில் உள்ள பெரும்பாலான தொடருந்து இயந்திரங்கள் மோசமான நிலையில் இருப்பதாகவும் பிரதி அமைச்சர் இதன்போது குறிப்பிட்டார்.
மேலும், “இயந்திரங்கள் மற்றும் தொடருந்து பெட்டிகள் இரண்டையும் பழுதுபார்ப்பதே எமது நோக்கம்” எனவும் அவர் தெரிவித்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

