• Login
Sunday, October 4, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

யாழ்ப்பாண கர்ப்பிணிப் பெண்ணுக்கு 60 நாள் அவகாசம்: நாடு கடத்தல் தொடர்பில் மதுரை உயர் நீதிமன்றின் உத்தரவு

GenevaTimes by GenevaTimes
October 4, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
யாழ்ப்பாண கர்ப்பிணிப் பெண்ணுக்கு 60 நாள் அவகாசம்: நாடு கடத்தல் தொடர்பில் மதுரை உயர் நீதிமன்றின் உத்தரவு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


இந்தியாவில் சட்டபூர்வமான திருமண ஆவணங்கள் இல்லாத நிலையில் தங்கியிருந்த எட்டு வார கர்ப்பிணியான இலங்கைப் பெண்ணை மீண்டும் இலங்கைக்கு நாடு கடத்தும் நடவடிக்கைக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தடை விதித்துள்ளது.


யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பவித்ரா கீத்தீஸ்வரன் என்ற பெண், திருச்சி மாவட்டம் லால்குடியைச் சேர்ந்த அருண்குமார் என்பவரைத் திருமணம் செய்து கொண்டதாகக் கூறி, இந்தியாவில் தொடர்ந்து தங்குவதற்கு அனுமதி கோரி நீதிமன்றத்தை நாடியிருந்தார்.


கடந்த செப்டம்பர் 30ஆம் திகதி வழங்கப்பட்ட உத்தரவில், பவித்ராவை உடனடியாக இலங்கைக்கு அனுப்பக் கூடாது என்றும், அவரும் அருண்குமாரும் தங்களது திருமண உறவை சட்டரீதியாகப் பதிவு செய்து கொள்ள 60 நாட்கள் அவகாசம் வழங்கப்படுவதாகவும் நீதிபதி சி. சரவணன் தெரிவித்துள்ளார்.

சுற்றுலா விசா

திருச்சி மாவட்டம் லால்குடி தாலுகாவைச் சேர்ந்த அருண்குமார், கடந்த ஆண்டு இலங்கையில் உள்ள உணவகம் ஒன்றில் பணியாற்றியபோது பவித்ராவை சந்தித்துள்ளார்.

யாழ்ப்பாண கர்ப்பிணிப் பெண்ணுக்கு 60 நாள் அவகாசம்: நாடு கடத்தல் தொடர்பில் மதுரை உயர் நீதிமன்றின் உத்தரவு | Deportation Issue Concerning Pregnant Lankan Woman


பவித்ராவின் தந்தை நடத்தி வந்த வியாபார நிலையத்தில் அவரை சந்தித்ததாகவும், இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டதாகவும் அருண்குமார் தெரிவித்துள்ளார்.


இதையடுத்து, கடந்த மே 14ஆம் திகதி பவித்ரா, சுற்றுலா விசாவில் அருண்குமாருடன் இந்தியாவுக்கு வந்துள்ளார்.

பின்னர், கடந்த ஜூன் 4ஆம் திகதி லால்குடியில் உறவினர்கள் முன்னிலையில் இருவரும் திருமணம் செய்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பவித்ராவுக்கு மே 14ஆம் திகதி முதல் ஜூன் 13ஆம் திகதி வரை ஒரு மாத காலத்திற்கே இந்தியாவில் தங்குவதற்கான சுற்றுலா விசா அனுமதி வழங்கப்பட்டிருந்ததாக இந்திய அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.



விசா காலம் முடிந்த பின்னரும் அவர் இந்தியாவில் தங்கியிருந்ததால், அவரை நாடு கடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இந்திய கிறிஸ்தவ திருமணச் சட்டம்



இதனைத் தொடர்ந்து, செப்டம்பர் 9ஆம் திகதி பவித்ரா மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

யாழ்ப்பாண கர்ப்பிணிப் பெண்ணுக்கு 60 நாள் அவகாசம்: நாடு கடத்தல் தொடர்பில் மதுரை உயர் நீதிமன்றின் உத்தரவு | Deportation Issue Concerning Pregnant Lankan Woman

  தனக்கும் அருண்குமாருக்கும் இடையிலான திருமணத்தை அங்கீகரித்து, 1954ஆம் ஆண்டு சிறப்பு திருமணச் சட்டத்தின் கீழ் பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் என அவர் கோரினார்.

பவித்ரா மற்றும் அருண்குமார் இருவரும் சிறப்பு திருமணச் சட்டத்தின் கீழ் திருமணத்தை பதிவு செய்வதற்கான நடைமுறைகளை முழுமையாகப் பின்பற்றவில்லை என நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.


மேலும், தங்களுக்கு கிறிஸ்தவ முறைப்படி திருமணம் நடைபெற்றதாக பவித்ரா ஏற்கெனவே அளித்திருந்த விண்ணப்பத்தில் குறிப்பிட்டிருந்ததாக அரசு தரப்பு சட்டத்தரணி தெரிவித்தார்.



ஆனால், அந்த திருமணத்தை இந்திய கிறிஸ்தவ திருமணச் சட்டத்தின் கீழ் அங்கீகரிப்பதற்குத் தேவையான ஆவணங்கள் சமர்ப்பிக்கப்படவில்லை என்றும் அரசு தரப்பு வாதிட்டது.



இதனால், சட்டரீதியாக அங்கீகரிக்கப்பட்ட எந்தவொரு திருமண முறையின் கீழும் அவர்களது திருமணம் தற்போது வரவில்லை என நீதிமன்றம் குறிப்பிட்டது.

வழக்கை விசாரித்த நீதிபதி சி. சரவணன், தம்பதியினர் திருமணத்தை சட்டப்படி பதிவு செய்வதற்கான நடைமுறைகளை முறையாகப் பின்பற்றாததால் பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.



அதேவேளை, “சட்டரீதியாகப் பார்த்தால் அங்கீகரிக்கப்பட்ட எந்தவொரு திருமண வடிவத்தின் கீழும் தம்பதியினரின் திருமணம் வரவில்லை.

ஆனால், இந்த உறவைச் சிதைப்பதற்கு நீதிமன்றம் விரும்பவில்லை” எனத் தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.

பவித்ரா கர்ப்பமாக இருப்பதையும் நீதிமன்றம் கருத்தில் கொண்டுள்ளது.

இந்த நிலையில், இந்து திருமணச் சட்டம் 1955, இந்திய கிறிஸ்தவ திருமணச் சட்டம் 1872 அல்லது சிறப்பு திருமணச் சட்டம் 1954 ஆகியவற்றில் பொருந்தக்கூடிய சட்டத்தின் கீழ் திருமணத்தை சட்டரீதியாக நடத்தி பதிவு செய்து கொள்ள தம்பதியினருக்கு 60 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து தங்குவது தொடர்பான விண்ணப்பம்


அந்த காலப்பகுதியில் பவித்ராவை இந்தியாவிலிருந்து நாடு கடத்தக் கூடாது என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறிப்பிட்ட காலத்திற்குள் திருமணம் சட்டப்படி பதிவு செய்யப்பட்டால், பொருந்தக்கூடிய சட்ட விதிகளுக்கு உட்பட்டு பவித்ரா இந்தியாவில் தொடர்ந்து தங்குவது தொடர்பான விண்ணப்பத்தை பரிசீலிக்கலாம் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

பவித்ரா எட்டு வார கர்ப்பிணியாக இருப்பதாக அவரது வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார்.

மேலும், இந்தியாவில் அருண்குமாரைத் தவிர தனக்கு வேறு நெருங்கிய உறவினர்கள் யாரும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.



இதையடுத்து, பவித்ராவின் உடல்நிலையை பரிசோதித்து மருத்துவ அறிக்கை சமர்ப்பிக்குமாறு அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அதிகாரிக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

அவருக்கு தேவையான மருத்துவ உதவிகளை வழங்கவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.

நீதிமன்றத் தீர்ப்பை வரவேற்றுள்ள பவித்ரா கீத்தீஸ்வரன், விசா காலம் முடிந்ததால் தன்னை மீண்டும் இலங்கைக்கு அனுப்பிவிடுவார்களோ என்ற அச்சத்தில் இருந்ததாக தெரிவித்துள்ளார்.


“அருண்குமாரை பிடித்துப் போனதால் அவருடன் இந்தியா வந்தேன். விசா நீட்டிக்கப்படாததால் மீண்டும் இலங்கைக்கு அனுப்பிவிடுவார்களோ என்ற அச்சத்திலேயே வாழ்ந்து வந்தேன்” என அவர் கூறியுள்ளார்.


தனது தாய் சிறு வயதிலேயே உயிரிழந்ததாகவும், 12ஆம் வகுப்பு வரை படித்த பின்னர் தந்தையுடன் வசித்து வந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தற்போது இந்தியாவில் தொடர்ந்து வசிக்கவே விரும்புவதாகவும், இலங்கைக்குத் திரும்பிச் செல்லும் எண்ணம் இல்லை என்றும் பவித்ரா தெரிவித்துள்ளார்.



இந்த வழக்கில், திருமணத்தை சட்டரீதியாகப் பதிவு செய்வதற்கான வாய்ப்பை தம்பதியினருக்கு வழங்கியதுடன், கர்ப்பிணியான இலங்கைப் பெண்ணை உடனடியாக நாடு கடத்தாமல் மருத்துவ உதவிகளும் கிடைக்க நீதிமன்றம் வழிவகுத்துள்ளது.

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!

Read More

Previous Post

ஆவணங்கள் இல்லாத குடியேறிகளை வேலைக்கு அமர்த்தும் முதலாளிகளுக்கு சைஃபுதீன் எச்சரிக்கை. – Malaysiakini

Next Post

2009-ல் நான் மத்திய அமைச்சராக வேண்டியது! யாராலோ தடுக்கப்பட்டது! திருமாவளவன் பகீர் பிளாஷ்பேக்! | Thirumavalavan reveals that someone stopped him from becoming Union Minister

Next Post
2009-ல் நான் மத்திய அமைச்சராக வேண்டியது! யாராலோ தடுக்கப்பட்டது! திருமாவளவன் பகீர் பிளாஷ்பேக்! | Thirumavalavan reveals that someone stopped him from becoming Union Minister

2009-ல் நான் மத்திய அமைச்சராக வேண்டியது! யாராலோ தடுக்கப்பட்டது! திருமாவளவன் பகீர் பிளாஷ்பேக்! | Thirumavalavan reveals that someone stopped him from becoming Union Minister

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin