16/01/1946 அன்று இலவச கல்வி வழங்கும் அரச பாடசாலைகள் திட்டத்தில் ஆரம்பிக்கப்பட்ட
யாழ் மாவட்டத்தின் முன்னணி பாடசாலைகளில் ஒன்றான வயாவிளான் மத்திய கல்லூரி தனது 80 வது ஆண்டு விழாவை எதிர்வரும் 16/01/2026 அன்று நினைவு கூரவுள்ளது.
உயர்தர பரீட்சை நடைபெறும் நிலையம் என்பதால் இது தொடர்பாக விஷேட பொங்கல் நிகழ்வு
அன்றைய தினம் வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில் வயாவிளான் சந்தியில் அமைந்துள்ள மானம்பராய் பிள்ளையார்
ஆலயத்தில் பாடசாலை சமூகம் சார்பில் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
கொரோனாவால் தடைப்பட்ட 75 ஆவது ஆண்டு விழா
கொரோனா தொற்று காரணமாக 75 வது ஆண்டு நிகழ்வு 2021 ம் ஆண்டு நடத்த முடியாத நிலை ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

