யாழ்ப்பாணத்தில் பல்வேறு இடங்களில் தொடர்ச்சியாக நகைகள், பணம் மற்றும் பொருட்களை களவாடிய
சம்பவம் தொடர்பாக நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.
யாழ் நகரில் நவீன சந்தை கட்டிடத் தொகுதியில் உள்ள கடையில் திருடப்பட்ட மூன்று
இலட்சத்து ஆறுபதாயிரம் ரூபாய் பெறுமதியான வலைகள், கலட்டி அம்மன் கோயில்
பகுதி அருகில் உள்ள வீடுகளில் திருடப்பட்ட
மூன்றரை பவுண் தங்க மோதிரம் மற்றும் ரூபாய் 25 ஆயிரம் பணம்
தொடர்பாக யாழ்ப்பாணம் தலைமையக காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.
களவாடப்பட்ட பொருட்களும் மீட்பு
குறித்த சம்பவங்கள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்ட யாழ்ப்பாணம் தலைமையக
காவல்துறையினர் நான்கு பேரை கைது செய்ததுடன் களவாடப்பட்ட பொருட்களையும் மீட்டனர்.

மேலதிக விசாரணைகளுக்கு பின்னர் கைதான நான்கு பேரும் யாழ்ப்பாணம் நீதிவான்
நீதிமன்றத்தில் முற்படுத்த யாழ்ப்பாணம் காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

