யாழில் வெளிநாட்டுக்கு அனுப்புவதாக கூறி பெண் ஒருவரிடம் சுமார் 30 இலட்சம்
ரூபாய்க்கு அதிகமாக வைத்திய தம்பதியொன்று ஏமாற்றி உள்ளதாக பாதிக்கப்பட்ட பெண்ணின்
தங்கை காவல்துறையில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.
குறித்த வைத்திய தம்பதி தனது அக்காவை வெளிநாடு
அனுப்புவதாக கூறி இரண்டு வருடங்களாக கம்போடியா நாட்டில் தடுத்து வைத்துள்ளதாக அவர் முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.
முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்
அத்தோடு, தனது அக்காவை போன்று மேலும் பலர் அங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும்
அவர்களுக்கு உணவு மற்றும் தாங்கும் உரிய முறையில் ஏற்படுத்திக் கொடுக்காத
காரணத்தினால் பலர் அடிமைகளாக அங்கு வேலை செய்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சம்பந்தப்பட்ட வைத்திய தம்பதி, நீர் கொழும்பில் வசிக்கும் இன்னுமொரு தரப்பினர்
ஊடாக ஆட்களை திரட்டி வெளிநாடுகளுக்கு அனுப்புவதாக மோசடி வர்த்தகத்தில்
ஈடுபட்டு வருகின்றதாகவும் முறைப்பாட்டாளர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், சந்தேகநபர்களான வைத்திய தம்பதியினரை கைது செய்து
சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் பாதிக்கப்பட்ட பெண்ணின் தங்கை கோரிக்கை முன்
வைத்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

