யாழில் விபத்தில் சிக்கி வயோதிப பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மானிப்பாய் காவல் பிரிவிற்குட்பட்ட சண்டிலிப்பாய் இந்துக்
கல்லூரிக்கு முன்பாக நேற்று (18) விபத்து சம்பவித்துள்ளது.
சண்டிலிப்பாய் மத்தியைச் சேர்ந்த செல்லத்துரை மனோன்மணி
(வயது 80) என்பவரே இவ்வாறு விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார்.
மேலதிக விசாரணை
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், குறித்த பெண் வீதியில் நடந்து சென்றுள்ளார்.
இதன்போது வீதியில்
வேகமாக வந்த முச்சக்கர வண்டி அவர்மீது மோதியதில் அவர் படுகாயமடைந்துள்ளார்.

இதையடுத்து, சிகிச்சைக்காக சங்கானை பிரதேச வைத்தியசாலைக்கு அவர் கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
அவரது சடலம் தற்போது சங்கானை வைத்தியசாலையில்
வைக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்து சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மானிப்பாய் காவல்துறையினர் மேற்கொண்டு
வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

