யாழில் நகை திருட்டில் இடுபட்ட பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பத்து கோடி ரூபாய் பெறுமதி
மதிக்கத்தக்க இரண்டு கிலோ கிராம் தங்க நகைகளை திருடிய குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கை நேற்று (13) மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நகைக் கடை
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், யாழ் மாநகர மத்தியில் இயங்கும் பிரபல நகைக் கடைகளில் ஒன்றில் சுமார்
ஒன்றரை வருடம் பணியாற்றிய குறித்த பெண், மூன்று மாதங்களுக்கு முன்னர் தனக்கு ஜனவரி 21ஆம்
திகதி திருமணம் என கூறி பணியிலிருந்து விலகியதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்தநிலையில் தான் பணியாற்றிய நகைக்
கடையில் சிறிது சிறிதாக தங்க நகைகளை குறித்த பெண் திருடியுள்ளார் என
குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

நகைக் கடையில் கணக்கெடுப்பில் சுமார் இரண்டு கிலோ கிராம் தங்க நகைகள்
காணாமல் போனமை அறியப்பட்டு ஆராயப்பட்ட போதே இவ்விடயம் கண்டறியப்பட்டுள்ளது.
இதையடுத்து, யாழ்ப்பாணம்
தலைமையக காவல் நிலையத்தில் நகைக் கடை முகாமைத்துவத்தினால் முறைப்பாடு
வழங்கப்பட்டுள்ளது.
மீட்கும் விசாரணை
முறைப்பாடு தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த யாழ்ப்பாணம் மாவட்ட குற்ற
விசாரணைப் பிரிவினர், குறித்த பெண்னை கைது செய்துள்ளனர்.
இதன்பின்பு, பெண்ணிடம் முன்னெடுத்த விசாரணைகளில் திருடப்பட்ட நகைகளை அடகு வைத்தும், விற்பனை
செய்தும் மற்றும் நிலத்துக்கு அடியில் புதைத்து வைத்துள்ளதாகவும் வாக்குமூலம்
வழங்கப்பட்டுள்ளது.

சான்றுப்பொருள்களை மீட்கும் விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.
மேலும், கைது செய்யப்பட்ட பெண்ணை வரும் ஜனவரி 27 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க
யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

