யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிளில் விபத்தில் இளைஞன் ஒருவர்
படுகாயமடைந்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி நேற்றைய தினம் சனிக்கிழமை பயணித்த தொடருந்துடன் விபத்து ஏற்பட்டுள்ளது.
அரியாலை 13ஆம் கட்டை பகுதியில் உள்ள பாதுகாப்பற்ற
புகையிரத கடவையை மோட்டார் சைக்கிளில் கடக்க முயன்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
விபத்துக்கு உள்ளான நிலை
தொடருந்து மோதி
விபத்துக்கு உள்ளான நிலையில் படுகாயமடைந்த இளைஞனை அங்கிருந்தவர்கள் மீட்டு ,
யாழ் . போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
குறித்த புகையிரத கடவை பாதுகாப்பற்ற கடவையாக காணப்படும் நிலையில், விபத்து
சம்பவங்கள் இடம்பெற்ற நிலையிலும் அதனை பாதுகாப்பான புகையிரத கடவையாக மாற்றம்
செய்து தருமாறு அப்பகுதி மக்கள் பல்வேறு தரப்பினர்களிடமும் கோரிக்கை
விடுத்துள்ள போதிலும் , தொடர்ந்து அது பாதுகாப்பற்ற கடவையாகவே காணப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

