யாழில் சைவ ஆலயம் ஒன்றின் சிலையானது உடைத்துச் சேதமாக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் நேற்று (09-03-2026) இடம்பெற்றுள்ளது.
ஊர்காவற்றுறை காவல் பிரிவிற்குட்பட்ட சரவணைப் பகுதியில் உள்ள சைவ ஆலயம் ஒன்றின் சிலையே இவ்வாறு உடைத்துச் சேதமாக்கப்பட்டுள்ளது.
முறைப்பாடு பதிவு
இதுகுறித்து ஊர்காவற்றுறை காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து, விசாரணைகளை மேற்கொண்ட ஊர்காவற்றுறை காவல்துறையினர் சந்தேகநபர் ஒருவரை நேற்றிரவே கைது செய்துள்ளனர்.
அவரிடம் விசாரணைகளை மேற்கொண்ட பின்னர், அவரை ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளைக் காவல்துறையினர் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

