யாழ். அல்லைப்பிட்டிப் பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதுடன் இருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து நேற்று திங்கள்கிழமை முற்பகல் ஊர்காவற்றுறை பிரதான வீதியின் அல்லைப்பிட்டியில் அமைந்துள்ள நண்டு பதப்படுத்தும் தொழிற்சாலைக்கு அருகில் இடம்பெற்றுள்ளது.
ஊர்காவற்றுறையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த இலங்கைப் போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்தும் அதே திசையில் பயணித்த முச்சக்கரவண்டியும் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மேலதிக விசாரணை
விபத்தில் ஓட்டோவில் பயணித்த மூவரும் படுகாயமடைந்த நிலையில் உடனடியாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

எனினும்இ அவர்களில் பெண்ணொருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
ஏனைய இருவரும் வைத்தியசாலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விபத்துக்கான காரணம் தொடர்பில் ஊர்காவற்றுறைப் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

