யாழ்ப்பாணம் – சுன்னாகம் ஈவினைப் பகுதியில் ஆபத்தை ஏற்படுத்தும் கூரிய ஆயுதங்களுடன் சந்தேக
நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கையானது யாழ்ப்பாணப் (Jaffna) பிராந்திய விசேட குற்றத்தடுப்பு பிரிவினரால் நேற்று (7) மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில்
வெளிநாட்டு பிரஜை ஒருவருக்கு சொந்தமான வீட்டிலே வாள் உள்ளிட்ட கூரிய ஆயுதங்கள்
இருப்பதாக காவல்துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய சோதனை நடவடிக்கை
முன்னெடுக்கப்பட்டுள்ளது.
காவல்துறையினரின் விசாரணை
இதன்போது, எட்டு ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதுடன் சம்பவம் தொடர்பாக கைதான சந்தேக
நபரிடம் விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

சந்தேகநபர் பல்வேறுபட்ட வன்முறைச் சம்பவங்களுடன் தொடர்புபட்டிருக்கலாம் என
சந்தேகிக்கும் காவல்துறையினர் குறித்த விடயத்தில் வெளிநாட்டு பிரஜைக்கும்
தொடர்புள்ளதா அல்லது வேறு நபர்களுக்கு தொடர்புள்ளதா என பல்வேறு கோணத்தில் விசாரணைகளை
மேற்கொண்டு வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்… |

