யாழ்ப்பாணத்தில் குப்பைக்கு வைத்த தீ வீட்டில் பற்றிக்கொண்டதால், வீடொன்று பகுதியளவில் தீயில் எரிந்துள்ளது.
அரியாலை பகுதியில் உள்ள வீடொன்றில் வசிப்பவர்கள் இன்றைய தினம் சனிக்கிழமை வீட்டு வளவுக்குள் இருந்த குப்பைக்கு தீ வைத்து விட்டு , வெளியே சென்றுள்ளனர்.
கூரையில் பற்றிய தீ
குப்பையில் பற்றிய தீ அருகில் வீட்டின் கூரையில் பற்றியநிலையில் வீடு இவ்வாறு தீப்பற்றியுள்ளது.

இதனை அவதானித்த அயலவர்கள் விரைந்து செயற்பட்டு தீயினை அணைத்துள்ளனர்.
குறித்த சம்பவத்தில் வீட்டின் ஒரு பகுதி தீயில் எரிந்துள்ளது.




| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

