யாழ்ப்பாணத்தில் இன்று மாலை இடம்பெற்ற வீதி விபத்தில் சகோதரர்கள் இருவர் சம்பவ இடத்திலேயே
உயிரிழந்துள்ளனர்.
கொழும்புத்துறை பகுதியை அண்டிய பகுதியில் இன்றைய தினம் திங்கட்கிழமை மாலை
இடம்பெற்ற குறித்த விபத்தில் மணியந்தோட்டம் பகுதியை சேர்ந்த பிரட்லீ (வயது 24)
அவரது சகோதரியான டிலக்ஸி (வயது 19) ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.
சகோதரர்களான இருவரும் மோட்டார் சைக்கிளில் பயணித்த போது, பவுசருடன் மோதி
விபத்துக்குள்ளாகியுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

