யாழ்ப்பாணத்தில் கஞ்சா கலந்த மாவா மற்றும் போதை மாத்திரைகள்
ஆகியவற்றுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சுற்றிவளைப்பு, கொட்டடி – கண்ணாபுரம் பகுதியில் நேற்றையதினம்(14.11) மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதன்போது, 2 கிலோ 790 கிராம் எடையுடைய கஞ்சா கலந்த மாவாவும், 50 போதை
மாத்திரைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.
சட்ட நடவடிக்கை
யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகரின் கீழ் இயங்கும் காவல்துறை
புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், யாழ்ப்பாணம்
காவல்துறை போதைப்பொருள் தடுப்பு காவல்துறை இந்த கைது நடவடிக்கை
முன்னெடுக்கப்பட்டுள்ளது.

விசாரணைகளின் பின்னர் அவரை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகள்
மேற்கொள்ளப்படவுள்ளன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

