Last Updated:
வடகொரியா தேர்தலில், கிம் ஜாங் உன்-னுக்கு எதிரான பதிவான 0.07 சதவிகித வாக்குகள் இணையத்தில் கவனம் பெற்றுள்ளன.
உலகின் பல நாடுகள் ஜனநாயக முறைப்படி தங்கள் தலைவர்களை தேர்ந்தெடுத்து வரும் நிலையில் வடகொரியாவை பொறுத்தவரை அங்கு சர்வதிகார ஆட்சி தான் நடைபெற்று வருகிறது. இந்த நாட்டில் பல மர்மங்கள், விசித்திரமான நடைமுறைகள் அனைத்தும் வெளிஉலகிற்கு இன்றுவரை எதுவும் தெரியாமலே இருந்து வருகிறது.
ஒரே கட்சி ஆட்சி முறையை கொண்ட வடகொரியாவில், நாடாளுமன்றத்துக்கான தேர்தல் கடந்த 15 ஆம் தேதி நடைபெற்றது. மொத்தம் உள்ள 687 தொகுதிகளிலும்ஆளும் கட்சியான தொழிலாளர் கட்சி வேட்பாளர் மட்டுமே போட்டியிட்ட நிலையில், அவருக்கு ஆதரவா இல்லையா என்பதை மட்டுமே வாக்காளர்களால் பதிவு செய்ய முடியும்.
தேர்தல் முடிவுகளை, அரசு ஊடகம் வெளியிட்டுள்ள நிலையில், வேட்பாளர்களுக்கு ஆதரவாக 99.93% வாக்குகள் கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளது. இந்தத் தேர்தலில் அதிபர் கிம் ஜாங் உன்னின் சகோதரி கிம் யோ ஜாங், கல்லிம்கில் (Kallimgil) தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.வேட்பாளர்களுக்கு எதிராக 0.07% வாக்குகள் கிடைத்துள்ளதை, 1957-ஆம் ஆண்டிற்குப் பிறகு அரசு அதிகாரப்பூர்வமாக ஒப்புக் கொண்டுள்ளது.
இதை சுட்டிக்காட்டி இணையத்தில் பல கேள்விகளும், விமர்சனங்களும் முன்வைக்கப்படுகின்றன. அடுத்த சில மாதங்களில் வட கொரியாவின் மக்கள் தொகை 0.07% குறையக்கூடும் என்றும் மற்றொருவர், அந்த 0.07% பேர் இப்போது நாட்டின் ‘மோஸ்ட் வான்டட்’ நபர்களாக மாறியிருப்பார்கள் எனவும் இணையத்தில் கருத்துகள் பகிரப்பட்டு வருகின்றன.
Chennai,Tamil Nadu

