சீமான் மீதான வழக்கில் ஆஜர்
அந்த வழக்கிற்காக நீதிபதி உத்தரவின் அடிப்படையில் எஸ் பி வருண்குமார் இன்று குற்றவியல் நீதிமன்றம் எண் 4 நீதிபதி(பொறுப்பு) பாலாஜி முன்பு நேரில் ஆஜராகினார். அவரிடம் நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர்களும், அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான சீமானும், தன்னுடைய கடமையை செய்ததற்காக, தன்னைப் பற்றியும், தன் குடும்பத்தினர் குறித்தும் அவதூறாகவும் ஆபாசமாகவும் சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்டுள்ளனர். மேலும் பொதுவெளியிலும் என் குறித்து பேசினார், குறிப்பாக ஜாதி உள்ளிட்டவை குறித்து பகிரங்கமாக பொதுவெளியில் சீமான் பேசினார். மிரட்டல் விடுக்கும் வகையிலும் அவர் பேசியுள்ளார் என்பது தொடர்பான கருத்துக்களை வரண்குமார் தெரிவித்தார். அதனை நீதிபதி பாலாஜி முழுமையாக பதிவு செய்து கொண்டார். அதனைத் தொடர்ந்து இந்த வழக்கை வரும் ஜனவரி மாதம் 7 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

