Last Updated:
Thanjavur Jallikattu| சிறந்த மாடுபிடி வீரர்களுக்கு சைக்கிள், டைனிங் டேபிள், சில்வா் அண்டா ஆதியவை பரிசுகளாக வழங்கப்பட்டன. இதேபோல் பிடிப்படாத மாடுகளுக்கான பரிசுகள் மாட்டின் உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்டன.
தஞ்சை, மாதாகோட்டையில் லூர்து மாதா ஜல்லிக்கட்டுப் பேரவை சார்பில் ஜல்லிக்கட்டுப் போட்டி நடந்தது. இந்த விழாவினை மாவட்ட ஆட்சியர் இலக்கியா உறுதிமொழி வாசித்துத் தொடங்கி வைத்தார். ஆண்டுதோறும் தஞ்சை அருகே மாதாகோட்டையில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்தப்படுகிறது. அந்த வகையில் இன்று நடந்த ஜல்லிக்கட்டுப் போட்டியை தஞ்சாவூர் எம்.எல்.ஏ. மற்றும் மாவட்ட ஆட்சியர் இலக்கியா ஆகியோர் வாசித்துத் தொடங்கி வைத்தனர்.
தொடர்ந்து, வாடிவாசலில் இருந்து தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருச்சி, மதுரை, அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து வந்த 657 காளைகள் ஒவ்வொன்றாகத் திறந்து விடப்பட்டன. காளைகளைப் பிடிக்க மொத்தம் 358 பேர் அனுமதிக்கப்பட்டனர். இவர்கள் 5 பிரிவுகளாகப் பிரித்து, ஒவ்வொரு பிரிவாகக் களமிறக்கப்பட்டனர். மாடு பிடிக்கும் போது வீரர்கள் தடுமாறி கீழே விழுந்தால் காயம் ஏற்படாத வகையில் வாடிவாசலிலிருந்து சுமார் 100 மீட்டர் தொலைவுக்குத் தேங்காய் நார் போடப்பட்டிருந்தது.
சிறந்த மாடுபிடி வீரர்களுக்கு சைக்கிள், டைனிங் டேபிள், சில்வர் அண்டா ஆகியவை பரிசுகளாக வழங்கப்பட்டன. இதேபோல் பிடிபடாத மாடுகளுக்கான பரிசுகள் மாட்டின் உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்டன. முன்னதாக, மாடு பிடி வீரர்களைச் சுகாதாரத் துறையைச் சேர்ந்த மருத்துவக் குழுவினர் உடல் நலம் உள்ளிட்ட பரிசோதனைகளை மேற்கொண்டு, அதன் பிறகு தகுதியானவர்கள் மட்டுமே களத்துக்குள் செல்ல அனுமதித்தனர். இதேபோல, மாடுகளைக் கால்நடைப் பராமரிப்புத் துறையினர் பரிசோதனை செய்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை தஞ்சை மாவட்ட எஸ்.பி., ராஜாராமன் உத்தரவின் பேரில் வல்லம் டி.எஸ்.பி., கணேஷ் குமார் தலைமையில் 400-க்கும் அதிகமான போலீசார் மேற்கொண்டனர்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
February 02, 2025 3:03 PM IST

