Last Updated:
கிரிக்கெட் வீரர் யஷ் தயாளுக்கு எதிராக இளம் பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார்.
கிரிக்கெட் வீரர் யஷ் தயாள் மீது புகார் அளித்த பெண்ணின் வாக்குமூலத்தை பதிவு செய்ய போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாடி வருபவர் 27 வயதான யஷ் தயாள். இவர் மீது இளம் பெண் ஒருவர் அளித்திருக்கும் புகார் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
உத்தரபிரதேச முதலமைச்சரின் ஆன்லைன் குறைத்தீர்க்கும் தளத்தில் அந்த பெண் அளித்த புகாரில், தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி உடல் மற்றும் மன ரீதியாக யஷ் தயாள் தன்னை பயன்படுத்திக்கொண்டு பின்னர் ஏமாற்றி விட்டதாக புகாரளித்திருந்தார்.
அந்தப் புகாரின் அடிப்படையில் பிணையில் வெளிவர முடியாதபடி பிஎன்எஸ் பிரிவு 60ன் கீழ் காசியாபாத் போலீசார் யஷ் தயாள் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
இந்நிலையில் குற்றம்சாட்டிய பெண்ணிடம் நீதிபதி முன்னிலையில் வாக்குமூலத்தை பதிவு செய்ய போலீசார் திட்டமிட்டுள்ளனர். யஷ் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் அவர் 10 ஆண்டுகள் வரை சிறையில் அடைக்கப்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது.
July 08, 2025 2:29 PM IST