Last Updated:
ம.பி.யில் உள்ள நானாஜி தேஷ்முக் கால்நடை பல்கலைக்கழகத்தில், பஞ்சகாவ்யம் என்ற பெயரில் மாட்டுச் சாணம் மற்றும் சிறுநீரில் இருந்து புற்றுநோய்க்கு மருந்து கண்டுபிடிக்க ஆய்வு செய்வதாக கூறி கோடிக்கணக்கில் மோசடி நடந்துள்ளதாக குற்றச்சாட்டு.
மத்திய பிரதேசத்தில் மாட்டுச் சாணம் மற்றும் சிறுநீரில் இருந்து புற்றுநோய்க்கு மருந்து கண்டுபிடிப்பதாக கூறி மூன்றரை கோடி ரூபாய் செலவில் நடத்தப்பட்ட ஆய்வில் முறைகேடு நடைபெற்றதாகப் புகார் எழுந்துள்ளது.
கடந்த 2011 ஆம் ஆண்டு மத்திய பிரதேசம் மாநிலம் ஜபால்பூரில் உள்ள நானாஜி தேஷ்முக் கால்நடை பல்கலைக்கழகத்தில், பஞ்சகாவ்யம் என்ற பெயரில் மாட்டுச் சாணம் மற்றும் சிறுநீரில் இருந்து புற்றுநோய்க்கு மருந்து கண்டுபிடிக்க ஆய்வு தொடங்கியது. இதற்கு பல்கலைக்கழகம் 8 கோடி ரூபாய் நிதி கோரிய நிலையில், அம்மாநில அரசு முதற்கட்டமாக மூன்றரை கோடி ரூபாய் ஒதுக்கியது.

இதில், கடந்த 2011 முதல் 2018 ஆம் ஆண்டு வரை, மாட்டுச் சாணம் மற்றும் கோமியத்தை 1.92 கோடி ரூபாய்க்கு வாங்கியதாக கணக்கு காட்டியுள்ளனர். மேலும், ஆய்வுக்காக பல்வேறு நகரங்களுக்கு 24 முறை விமானப் பயணம் மேற்கொண்டதாகவும் பல்கலைக்கழகம் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், ஆய்வுக்கு செலவு செய்த நிதியில் முறைகேடு நடந்திருப்பதாக மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், துணை ஆட்சியர் ரகுவர் மாராவி தலைமையில் விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது.


