• Login
Tuesday, April 7, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

மோதலுக்கு இடையே சீன அமைச்சரை பார்த்ததும் ஜெய்சங்கர் செய்த செயல்.. எஸ்சிஓ மாநாட்டில் சுவாரசியம் | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
July 4, 2024
in மலேசியா
Reading Time: 2 mins read
0
மோதலுக்கு இடையே சீன அமைச்சரை பார்த்ததும் ஜெய்சங்கர் செய்த செயல்.. எஸ்சிஓ மாநாட்டில் சுவாரசியம் | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


அஸ்தானா: இந்தியாவுக்கும் சீனாவுக்குமான உறவில் தொடர் விரிசல்கள் ஏற்பட்டு வரும் நிலையில், இன்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் இ ஆகியோர் கஜகஸ்தானில் நேரில் சந்தித்து உரையாடியுள்ளனர்.

கடந்த 2020ஆம் ஆண்டில் இந்தியா-சீன எல்லையான கல்வான் பள்ளத்தாக்கில் இரு நாட்டு வீரர்களுக்கு இடையிலான மோதல் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த மோதல் சம்பவம் இரு நாட்டின் உறவில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியது. இதனையடுத்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட இரு நாட்டு ராணுவம் தற்போது பதற்றத்தை தனித்திருக்கிறது. இருப்பினும், ராஜதந்திர உறவில் இந்த பதற்றம் இன்னும் தணியவில்லை.

இதற்கு அமெரிக்காவும் முக்கிய காரணமாக இருக்கிறது. அதாவது இந்தியாவில் இருக்கும், திபெத்திய புத்த மத தலைவர் தலாய் லாமாவை அமெரிக்க நாடாளுமன்றத்தின் சிறப்பு உறுப்பினர்கள் பெலோசி உள்ளிட்டோர் சமீபத்தில் சந்தித்து பேசியிருந்தனர். இப்படி ஒரு சந்திப்பு நிகழும் என்று ஏற்கெனவே சீனாவுக்கு தெரியும். எனவே இதற்கு சீனா எதிர்ப்பு தெரிவித்திருந்தது. இருப்பினும் இந்த எதிர்ப்பை அமெரிக்கா பொருட்படுத்தவில்லை. இந்தியாவும் கண்டும் காணாமல் இருந்துவிட்டது.

ஏற்கெனவே ராணுவ வீரர்கள் மோதல், டிக்டாக் போன்ற சீன செயலிகளை தடை செய்திருந்தது என சீனாவுக்கு எதிராக இந்தியா எடுத்த நடவடிக்கைகள் காரணமாக இரு நாட்டு உறவில் ஒரு சுமுகமின்மை நீடித்து வருகிறது. இப்படி இருக்கையில் அமெரிக்க அரசியல் தலைவர்கள் தலாய் லாமாவை சந்தித்திருந்தது இந்த சுமுகமின்மையை மேலும் தீவிரமாக்கியுள்ளது.

இந்நிலையில்தான் இன்று சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் இ மற்றும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அஸ்தானாவில் சந்தித்துள்ளார். ஏற்கெனவே இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ஜெர்மனியில் இருவரும் சந்தித்து பேசியிருந்தனர். அந்த வகையில் இது இரண்டாவது சந்திப்பாகும். அஸ்தானாவில் தற்போது எஸ்சிஓ மாநாடு நடைபெற்று வருகிறது.

இந்த எஸ்சிஓ அமைப்பில் இந்தியா, சீனா, ரஷ்யா, பாகிஸ்தான், கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகள் உறுப்பினர்களாக இருக்கின்றன. ஆண்டுக்கு ஒருமுறை எஸ்சிஓ அமைப்பின் உச்சி மாநாடு நடைபெறுகிறது. இந்த ஆண்டு கஜகஸ்தானில் இம்மாநாடு நடைபெறுகிறது. இதில் இந்தியா சார்பில் ஜெய் சங்கர் பங்கேற்றிருக்கிறார்.

முன்னதாக பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க இருந்ததாக சொல்லப்பட்ட நிலையில், மோடியின் ரஷ்ய பயணம் காரணமாக ஜெய்சங்கர் இதில் பங்கேற்றிருக்கிறார். இந்த பங்கேற்பின்போதுதான் சீன வெளியுறவுத்துறை அமைச்சரை சந்தித்திருக்கிறார். இந்த சந்திப்பு இரு நாட்டு உறவுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.



Read More

Previous Post

தோனி முதல் சச்சின் வரை… ரெஸ்டாரன்ட் வைத்து நடத்தும் கிரிக்கெட் வீரர்கள் யார் தெரியுமா?

Next Post

ஜனாதிபதியின் பொருளாதார மீட்பு வேலைத்திட்டங்களை எதிர்ப்பது துரோக அரசியலின் வெளிப்பாடு

Next Post
ஜனாதிபதியின் பொருளாதார மீட்பு வேலைத்திட்டங்களை எதிர்ப்பது துரோக அரசியலின் வெளிப்பாடு

ஜனாதிபதியின் பொருளாதார மீட்பு வேலைத்திட்டங்களை எதிர்ப்பது துரோக அரசியலின் வெளிப்பாடு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin