சிராங்கூனில் மே 27-ஆம் தேதி அன்று 41 வயதுடைய நபரின் மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டார் என்று அறிவிக்கப்பட்டது.
இச்சம்பவம் கால்டெக்ஸ் பெட்ரோல் நிலையத்திற்கு அருகில் உள்ள லோரோங் சுவான் என்ற இடத்தில் காலை நடந்தது.இச்சம்பவம் குறித்து சிங்கப்பூர் குடிமைத் தற்காப்பு படைக்கு காலை 6.20 மணியளவில் தகவல் கிடைத்ததாக தெரிவித்து.
மோட்டார் சைக்கிள் சறுக்கி விழுந்திருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
விபத்துக்கான காரணம் குறித்து காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.

