புக்கிட் பாத்தோக் பேருந்து நிலையம் அருகே மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட 46 வயதுமிக்க ஆடவர் மாண்டார் என சொல்லப்பட்டுள்ளது.
டிசம்பர் 5 ஆம் தேதி இரவு, புக்கிட் பாத்தோக் ஸ்ட்ரீட் 23 இல் நடந்த மோட்டார் சைக்கிள் மற்றும் பாதசாரி தொடர்புடைய விபத்து குறித்து இரவு 11.20 மணிக்கு காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
கட்டுமானப் பணியின்போது கண்டெடுக்கப்பட்ட 4 சவப்பெட்டிகள்: உறவினர்கள் தொடர்புகொள்ளலாம் – LTA அறிவிப்பு
இதில் 27 வயதுமிக்க மோட்டார் சைக்கிள் ஓட்டுநர், சுயநினைவுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
விபத்தில் சிக்கி மயக்க நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட பாதசாரி சிகிச்சை பலனின்றி பின்னர் இறந்தார் என்றும் சொல்லப்பட்டுள்ளது.
தேசிய பல்கலைக்கழக மருத்துவமனைக்கு ஒருவரும், மற்றொருவர் இங் டெங் ஃபாங் பொது மருத்துவமனைக்கும் கொண்டு செல்லப்பட்டதாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை (SCDF) தெரிவித்துள்ளது.
விபத்து தொடர்பான காணொளி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
விசாரணைகள் தொடர்வதாக காவல்துறை தெரிவித்தது.
சிங்கப்பூரில் இந்திய ஓட்டுநர் செய்த தவறு… அபராதம், வாகனம் ஓட்டத் தடை

