Last Updated:
கடந்த 11 ஆண்டுகளில் பிரதமர் மோடியின் தலைமையில் அரசு செய்த பணிகள் அசாதாரணமானவை, மேலும் அவை பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டும் என்று பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா தெரிவித்துள்ளார்.
கடந்த 10 ஆண்டுகளாக பிரதமர் மோடி தலைமையில் மத்தியில் பாஜக ஆட்சி செய்து வருகிறது. தொடர்ந்து கடந்த வருடம் ஜூன் மாதம் 9ஆம் தேதி குடியரசுத் தலைவர் மாளிகையில் அவர் பிரதமராக மூன்றாவது முறையாகப் பதவியேற்றார். அதன்படி மோடி 3.0 ஆரம்பித்து ஓராண்டு நிறைவு பெற்ற நிலையில், நாட்டில் பாஜக ஆட்சி வந்து 11 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளன.
இந்த நிலையில், கடந்த 11 ஆண்டுகளில் பிரதமர் மோடியின் தலைமையில் அரசு செய்த பணிகள் அசாதாரணமானவை, மேலும் அவை பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டும் என்று பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா தெரிவித்துள்ளார்.
அதேநேரம், கடந்த 11 ஆண்டுகளில் ஒருமுறை கூட பிரதமர் மோடி செய்தியாளர் சந்திப்பை நடத்தவில்லை என காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ் விமர்சித்துள்ளார்.
இது குறித்த தனது எக்ஸ் பதிவில், உலகின் பெரும் நாடுகளின் தலைவர்களே சுதந்திரமாக செய்தியாளர்கள் சந்திப்பை நடத்தும் போது, ஒரு பத்திரிகையாளர் சந்திப்பைக் கூட நடத்துவதற்கான துணிச்சல் பிரதமர் மோடிக்கு வரவில்லை என்றும் ஜெய்ராம் ரமேஷ் கடுமையாக விமர்சித்துள்ளார்.
Chennai [Madras],Chennai,Tamil Nadu
June 10, 2025 7:11 AM IST

