• Login
Friday, September 11, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

மோடி – புடின் – பெஷேஷ்கியன் மெகா சந்திப்பு.. BRICS கூட்டத்திற்கு முன் முக்கிய கூட்டம்.. எதற்காக..? | Modi Holds High-Stakes Bilaterals with Putin and Pezeshkian Ahead of BRICS Summit: S-400, Su-57, and Chabahar Port Take Center Stage

GenevaTimes by GenevaTimes
September 11, 2026
in வணிகம்
Reading Time: 2 mins read
0
மோடி – புடின் – பெஷேஷ்கியன் மெகா சந்திப்பு.. BRICS கூட்டத்திற்கு முன் முக்கிய கூட்டம்.. எதற்காக..? | Modi Holds High-Stakes Bilaterals with Putin and Pezeshkian Ahead of BRICS Summit: S-400, Su-57, and Chabahar Port Take Center Stage
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


மோடி – புடின் – பெஷேஷ்கியன் மெகா சந்திப்பு.. BRICS கூட்டத்திற்கு முன் முக்கிய கூட்டம்.. எதற்காக..?

பிரிக்ஸ் நாடுகளின் தலைவர்கள் சந்திப்பு நாளை டெல்லியில் மிக பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கும் வேளையில் இன்று காலை இந்தியா வந்த ரஷ்ய அதிபர் புடின் உடன் பிரதமர் மோடி சந்திக்க உள்ளார்.

மேற்கத்திய நாடுகளுடன் போட்டிப்போட மக்கள் தொகை, உற்பத்தி, நுகர்வு என பல பிரிவுகளில் பெரும் பலம் கொண்ட பிரிக்ஸ் நாடுகளின் இந்த கூட்டம் டாலர் மதிப்பு ஆதிக்கம், உலக நாடுகளில் போர் பதற்றம், வரி விதிப்பு, வர்த்தக பாதிப்பு, நாணய பரிமாற்றத்தில் தடுமாற்றம் அதிகம் உள்ள நேரத்தில் நடப்பதால் மிகவும் முக்கியமானதாக திகழ்கிறது.

மோடி - புடின்  - பெஷேஷ்கியன் மெகா சந்திப்பு.. BRICS கூட்டத்திற்கு முன் முக்கிய கூட்டம்.. எதற்காக..?

செப்டம்பர் 12-13 ஆம் தேதிகளில் நடைபெறும் பிரிக்ஸ் தலைவர்கள் மாநாட்டில் கலந்துக்கொள்வதற்காக இன்று காலை டெல்லிக்கு விமானம் மூலம் வந்திறங்கிய ரஷ்ய அதிபர் புடின் இன்று மதியம் பிரதமர் நரேந்திர மோடி உடன் இருதரப்பு வர்த்தக பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.

இக்கூட்டத்தில் பாதுக்காப்பு துறை, எனர்ஜி, தொழில்நுட்ப துறையில் இரு நாடுகள் மத்தியிலான உறவு குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். கடந்த வாரம் தான் புடின் மற்றும் மோடி ஆகியோர் ஷாங்காய் கூட்டுறவு அமைப்பின் கூட்டத்தில் கலந்துக்கொண்டு பேசியது குறிப்பிடத்தக்கது.

இன்றைய கூட்டத்தில் பாதுக்காப்பு துறைக்கு அதிகப்படியான கவனம் செலுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் முக்கியமாக ப்ராமோஸ் ஏவுகணையில் மேம்பாடுகளை செய்வது குறித்து பேசப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேவேளையில் ரஷ்யா இந்தியாவுக்கு அளிக்க வேண்டிய S-400 ஏவுகணை அமைப்பு மற்றும் SU-57 போர் விமானத்தை டெலிவரி செய்வது குறித்தும் பேசப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளையில் இந்தியாவில் அதிகரித்து வரும் மின்சார தேவையை பூர்த்தி செய்ய இந்தியா – ரஷ்யாவும் இணைந்து புதிய அணுமின் நிலையம் அமைப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

மோடி - புடின்  - பெஷேஷ்கியன் மெகா சந்திப்பு.. BRICS கூட்டத்திற்கு முன் முக்கிய கூட்டம்.. எதற்காக..?

இன்று பிரதமர் 2 நாடுகள் உடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்துகிறார், ரஷ்ய அதிபர் உடன் மதியம் 3 மணிக்கும், ஈரான் அதிபர் மசூத் பெஷேஷ்கியன் உடன் மாலை 6 மணிக்கும் பேசுவார்த்தை நடத்த உள்ளார்.

இன்றைய கூட்டத்தில் மோடிக்கு இருக்கும் பெரும் சவால் ரஷ்யா உடனான வர்த்தக உறவை நிலைப்படுத்துவது தான். அமெரிக்கா தொடர்ந்து வர்த்தக ஏற்ற இறக்கம் காரணமாக வரி விதிப்பு மிரட்டல்களை எதிர்கொண்டு வரும் வேளையில் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் கொள்முதலை எப்படி சமநிலை செய்யப்போகிறது, எப்படி இரு நாடுகள் மத்தியில் வர்த்தகம் – பொருளாதார உறவை மேம்படுத்துவது என்பது பெரும் சவலாக இருக்கும்.

அடுத்த சவால் அமெரிக்கா – ஈரான் மத்தியிலான போர் உச்சத்தில் இருக்கும் வேளையில் ஈரான் அதிபருடன் இருதரப்பு பேச்சுவார்த்தை மிகவும் முக்கியமானதாக விளங்குகிறது. மசூத் பெஷேஷ்கியன் இந்தியாவுக்கு 8 ஆண்டுகளுக்கு பின்பு பிரிக்ஸ் கூட்டத்திற்காக இந்தியா வந்துள்ளார்.

இந்தியா ஈரானுடன் கச்சா எண்ணெய், உணவு பொருட்கள் தாண்டி, துறைமுக நிர்வாகத்திலும் பணியாற்றி வருகிறது. ஈரான் நாட்டில் சபஹார் துறைமுகத்தை ஏற்கனவே இந்தியா நிர்வாகம் செய்து வரும் வேளையில் அமெரிக்கா பொருளாதார, வர்த்தக தடைகள் விதிக்கும் வேளையில் இதை எப்படி சமாளிப்பது என்பது முக்கிய ஆலோசனையாக இந்த சந்திப்பில் இருக்கும்.

Share This Article

English summary

Modi Holds High-Stakes Bilaterals with Putin and Pezeshkian Ahead of BRICS Summit: S-400, Su-57, and Chabahar Port Take Center Stage

Modi Holds High-Stakes Bilaterals with Putin and Pezeshkian Ahead of BRICS Summit: S-400, Su-57, and Chabahar Port Take Center Stage — மோடி – புடின் – பெஷேஷ்கியன் மெகா சந்திப்பு.. BRICS கூட்டத்திற்கு முன் முக்கிய கூட்டம்.. எதற்காக..?

Story first published: Friday, September 11, 2026, 12:25 [IST]

Other articles published on Sep 11, 2026

Read More

Previous Post

கம்யூனிஸ்ட் கட்சிகள் தவெக கூட்டணியில் இணைவார்களா? செங்கோட்டையன் சொன்ன அந்த பதில்! | Sengottaiyan: Minister Sengottaiyan Says “Wait and See” on Left Joining TVK Alliance, Predicts 100% Bypoll Victory

Next Post

மற்றுமொரு ஆடம்பர வீடு….! ஷிரான் பாசிக்கின் தந்தையிடம் CCIB விசாரணை

Next Post
மற்றுமொரு ஆடம்பர வீடு….! ஷிரான் பாசிக்கின் தந்தையிடம் CCIB விசாரணை

மற்றுமொரு ஆடம்பர வீடு....! ஷிரான் பாசிக்கின் தந்தையிடம் CCIB விசாரணை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin