Last Updated:
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினின் இந்திய வருகையைத் தொடர்ந்து, இருநாட்டு தலைவர்கள் மத்தியில் நடைபெற்ற இந்த உரையாடல் கவனம் பெற்றுள்ளது.
அமெரிக்க அதிபர் டிரம்ப் உடன் தொலைபேசியில் உரையாடிய பிரதமர் நரேந்திர மோடி, உலக அமைதி, ஸ்திரத்தன்மைக்காக இருநாடுகளும் தொடர்ந்து இணைந்து செயல்படும் எனத் தெரிவித்துள்ளார்.
இந்தியா மீது அமெரிக்கா கடுமையான வரிகளை விதித்துள்ள சூழலில், பிரதமர் நரேந்திர மோடியும், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும் தொலைபேசியில் உரையாடினர். இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரதமர், இருவருக்கும் இடையிலான உரையாடல் சுவாரஸ்யமாக அமைந்ததாகத் தெரிவித்துள்ளார்.
இந்த உரையாடலின்போது, இருதரப்பு உறவுகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை மதிப்பாய்வு செய்ததாகவும், பிராந்திய மற்றும் சர்வதேச நிலவரங்கள் குறித்து இருவரும் விவாதித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், உலக அமைதி, ஸ்திரத்தன்மைக்காக இருநாடுகளும் தொடர்ந்து இணைந்து செயல்படும் என்றும் உறுதி அளித்துள்ளார்.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினின் இந்திய வருகையைத் தொடர்ந்து, இருநாட்டு தலைவர்கள் மத்தியில் நடைபெற்ற இந்த உரையாடல் கவனம் பெற்றுள்ளது. இதனிடையே, குழந்தையை பெற்றெடுத்து, அதன் மூலம் அமெரிக்க குடியுரிமை பெற நினைத்தால் சுற்றுலா விசாக்கள் நிராகரிக்கப்படும் என இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகம் அறிவித்துள்ளது.
இந்நிலையில், இருநாட்டு தலைவர்களின் உரையாடலுக்குப் பிறகு, இந்தியா – அமெரிக்கா இடையிலான உரசல் முடிவுக்கு வருமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
December 11, 2025 9:21 PM IST
மோடி – டிரம்ப் தொலைபேசியில் உரையாடல்.. இந்தியா – அமெரிக்கா உறவில் புதிய திருப்பம் ஏற்படுமா?


