இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பதவிக்கு பிரதமர் மோடி, முன்னாள் வீரர்கள் சச்சின் டெண்டுல்கர், எம்.எஸ்.தோனி உள்ளிட்ட பலரின் பெயர்களில் போலி விண்ணப்பங்கள் வந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டின் பதவிக் காலம் வரும் டி20 உலகக் கோப்பை தொடருடன் முடிவடையும் நிலையில், புதிய பயிற்சியாளரை தேடும் பணியில் இந்திய கிரிக்கெட் வாரியம் தீவிரமாக உள்ளது. ஏற்கெனவே, ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங், சென்னை சூப்பர் கிங்ஸ் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் உள்ளிட்டோர் விருப்பம் தெரிவித்துள்ளதாக கூறப்பட்ட நிலையில், யாராக இருந்தாலும் முறைப்படி விண்ணப்பித்தால் மட்டுமே பரிசீலிக்க முடியும் என பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தெரிவித்தார்.
இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு பிரதமர் மோடி, அமித் ஷா, ஷாருக்கான், தோனி என பலரும் விண்ணப்பித்து இருக்கிறார்கள். இது உண்மையா என்று பார்த்தால், அத்தனையும் போலி விண்ணப்பங்கள் என விளக்கம் அளித்துள்ளது பிசிசிஐ. தலைமை பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க நேற்றுதான் கடைசி நாளாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், சுமார் 3,600 விண்ணப்பங்கள் போலியானவை என பிசிசிஐ தெரிவித்துள்ளது.
பிரதமர் மோடி, அமித் ஷா, ஷாருக்கான், தோனி ஆகியோர் மட்டுமல்லாமல், சச்சின் டெண்டுல்கர், வீரேந்திர சேவாக் உள்ளிட்டோரின் பெயர்களிலும் பல போலி விண்ணப்பங்கள் வந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த முறை பயிற்சியாளர் பதவிக்கு தேடுதல் வேட்டை நடந்தபோதும், அப்போதும் இதேபோல் பல போலி விண்ணப்பங்கள் வந்ததாகவும், தற்போது போலி விண்ணப்பங்களை கண்டறிய புதிய வழிமுறைகள் பின்பற்றப்படுவதாகவும் பிசிசிஐ தெரிவித்துள்ளது.
.
&w=750&resize=750,375&ssl=1)
&w=1200&resize=1200,675&ssl=1)