கொழும்பில் துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்திற்கு இலக்காகி உணவக உரிமையாளர் ஒருவர் காயமடைந்துள்ளார்.
மொறட்டுவ – சொய்சாபுர பகுதியில் காரில் வந்த இனந்தெரியாத நபர்கள் இந்த துப்பாக்கி சூட்டை நடத்தியுள்ளனர்.
காயமடைந்த நபர் சிகிச்சைக்காக உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊடகப் பேச்சாளர்
காவல்துறை ஊடகப் பேச்சாளர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

துப்பாக்கிச்சூட்டுக்கான காரணம் மற்றும் சந்தேகநபர்களின் விவரங்கள் இதுவரை கண்டறியப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

