• Login
Saturday, August 1, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

மொரோக்கோவில் கடும் பஞ்சம்.. கடலில் நீந்தி ஸ்பெயினுக்குள் நுழையும் பல ஆயிரக்கணக்கான மக்கள்! | Severe famine in Morocco: thousands of people swimming across the sea to enter Spain

GenevaTimes by GenevaTimes
August 1, 2026
in இந்தியா
Reading Time: 2 mins read
0
மொரோக்கோவில் கடும் பஞ்சம்.. கடலில் நீந்தி ஸ்பெயினுக்குள் நுழையும் பல ஆயிரக்கணக்கான மக்கள்! | Severe famine in Morocco: thousands of people swimming across the sea to enter Spain
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


International

oi-Mani Singh S

Time
Published: Saturday, August 1, 2026, 12:56 [IST]

மாட்ரிட்: மொரோக்கோ நாட்டில் வரலாற்றில் காணாத கடும் பஞ்சம் ஏற்பட்டுள்ள நிலையில் அங்குள்ள மக்கள் ஸ்பெயின் நாட்டுக்குள் தஞ்சம் புகுந்து வருகிறார்கள். ஸ்பெயினின் சியூட்டார் நகருக்கு கடலில் நீந்தி மக்கள் பயணித்து வருகிறார்கள். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் சியூட்டா நகருக்குள் 60 ஆயிரம் மக்கள் நுழைந்து உள்ளார்களாம். கடலில் நீந்தி ஸ்பெயினின் சியூட்டா நகருக்குள் நுழைய முயன்றவர்களில் 57 புலம் பெயர்ந்த மக்கள் உயிரிழந்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

வட ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்று மொரோக்கோ. இந்த நாட்டில் தற்போது கடுமையான பஞ்சம் நிலவுகிறது. வேலை வாய்ப்பு குறைவு, விலை வாசி அதிகரிப்பு ஆகியவற்றால் மொரோக்கோ நாட்டில் வசிக்கும் மக்கள் சிரமத்தை சந்தித்து வருகிறார்கள். அங்கு நிலவும் வரலாறு காணாத பஞ்சம், நெருக்கடி காரணமாக ஐரோப்பிய நாடுகளுக்கு மக்கள் ஆபத்தான முறையில் புலம் பெயர முயற்சி செய்து வருகிறார்கள்.

Morocco thousands of people swimming across the sea to enter Spain

60 ஆயிரம் மக்கள் நுழைந்துள்ளனர்

ஸ்பெயினின் முக்கிய நகரங்களாக உள்ள சியூட்டா ஆப்பிரிக்காவின் வடகடலோர பகுதியில் உள்ளது. ஐரோப்பிய யூனியனுடன் ஆப்பிரிக்கக் கண்டத்தை இணைக்கும் நில எல்லையாக இவை உள்ளன. இதன் காரணமாக கடலில் நீண்ட தூரம் பயணிப்பதை விட, நீந்தியோ அல்லது பெரிய அளவிலான எல்லை சுவர்களை எளிதில் கடந்தோ ஐரோப்பாவுக்கு வந்துவிடலாம் என்பதால் சியூட்டாவை நோக்கி அதிக அளவில் மொரோக்கோ இளைஞர்கள் திரண்டு வருகிறார்கள்.

அன்வராக மாறிய டோனி.. அலறியடித்து போலீசுக்கு ஓடிய மனைவி.. கைது செய்த போலீஸ்

அன்வராக மாறிய டோனி.. அலறியடித்து போலீசுக்கு ஓடிய மனைவி.. கைது செய்த போலீஸ்

அந்த வகையில், ஸ்பெயினின் சியூட்டா நகருக்குள் நுழைய முயன்றவர்களில் 57 புலம் பெயர்ந்த மக்கள் உயிரிழந்து இருப்பதாக ஸ்பெயின் கூறியுள்ளது. சியூட்டா நாகரின் பிராந்திய அதிபர் ஜுவன் ஜீசச் விவாஸ் இந்த தகவலை உறுதி செய்துள்ளார். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் ஸ்பெயினில் இருந்து சியூட்டாநகருக்கு 60 ஆயிரம் மக்கள் நுழைந்து இருப்பதாகவும் கூறினர். மொரோக்கோவில் இருந்து வரும் மக்களை உடனடியாக திருப்பி அனுப்பக்கூடாது என்று ஸ்பெயின் நாட்டின் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

45 ஆயிரம் பேர் திருப்பி அனுப்பப்பட்டனர்

இதன் காரணமாக ஸ்பெயின் அரசால் எந்த நடவடிக்கையும் தற்போதைய நிலையில் எடுக்க முடியவில்லை. மொராக்கோ நாட்​டின் ஃபனிடெக், பெலியூன் மற்​றும் அதைச் சுற்​றி​யுள்ள பகுதிகளில் தரை மற்​றும் கடல் வழி​யாக ஸ்பெ​யின் எல்லையான சியூட்டாவை நோக்கி குவிந்தனர். பாதுகாப்பு படையினரின் கெடுபிடிகளையும் மீறி கடல்வழியாக நீந்தி ஸ்பெயின் பகுதிக்குள் செல்ல முயன்றனர். இதனால், ஸ்பெயின் அரசு எல்லையில் ராணுவம் மற்றும் போலீசாரை குவித்துள்ளது.

ரஷ்யாவில் இருந்து அமெரிக்காவிற்கு நடந்தே போய்விடலாம்.. வெறும் 4 கிமீயில் 21 மணி நேர வித்தியாசம்

ரஷ்யாவில் இருந்து அமெரிக்காவிற்கு நடந்தே போய்விடலாம்.. வெறும் 4 கிமீயில் 21 மணி நேர வித்தியாசம்

ஸ்பெயினுக்குள் மொரோக்கோ நாட்டவரை வரவிடாமல் தடுக்கும் விதமாக தண்ணீரை பீய்ச்சி அடித்தனர். ஸ்பெயின் இந்த அளவுக்கு கெடுபிடிகள் காட்டினாலும், இதனையும் மீறி 64 ஆயிரம் பேர் வரை சியூட்டா நகருக்குள் நுழைந்துவிட்டனர். அப்போது தள்ளுமுள்ளு மற்றும் நெரிசல் ஏற்பட்டுள்ளது. அப்போதுதான் இந்த உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. ஸ்பெயினுக்குள் நுழைந்த 60 ஆயிரம் பேரில் 45 ஆயிரம் பேர் மீண்டும் திருப்பி அனுப்பப்பட்டனர்.

தீவிர கண்காணிப்பு பணி

சியூட்டா பகுதியில் டிரோன்கள், நீர் மூழ்கி வீரர்கள், படகுகள் வழியாக ஸ்பெயின் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளது. ஸ்பெயினுக்குள் திடீரென மக்கள் படையெடுக்க தொடங்கியுள்ளது ஸ்பெயின் அரசுக்கு பெரும் நெருக்கடியை கொடுத்துள்ளது. ஜெர்மனி, இத்தாலி மற்றும் பின்லாந்து ஆகிய நாடுகளும் கண்டனம் தெரிவித்துள்ளனன. மற்றொரு பக்கம் பிரான்ஸும் முன்னெச்சரிக்கையாக ஸ்பெயினுடனான எல்லையில் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளது.

English summary

Morocco: Amidst a severe, unprecedented drought in Morocco, people are seeking refuge in Spain. Many are making the journey to the Spanish city of Ceuta by swimming across the sea. Reports indicate that as many as 60,000 people have entered Ceuta in the last 24 hours alone. It has been reported that 57 migrants lost their lives while attempting to swim to the city.

Read More

Previous Post

அதிர்ச்சியில் ஐரோப்பா: கடலில் நீந்தி ஒரே நாளில் ஸ்பெயினுள் புகுந்த 60000 பேர் – பலர் பலி

Next Post

PF இணைய சேவை முடக்கம்.. ஜூலை ஓய்வூதியம் கிடைக்காமல் தவிக்கும் ஓய்வூதியதாரர்கள்..!

Next Post
PF இணைய சேவை முடக்கம்.. ஜூலை ஓய்வூதியம் கிடைக்காமல் தவிக்கும் ஓய்வூதியதாரர்கள்..!

PF இணைய சேவை முடக்கம்.. ஜூலை ஓய்வூதியம் கிடைக்காமல் தவிக்கும் ஓய்வூதியதாரர்கள்..!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin