மொரட்டுவை துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தையடுத்து மற்றுமொரு துப்பாக்கி சூட்டு சம்பவம் பதிவாகியுள்ளது.
பிலியந்தலை, சுவரபொல பகுதியில் இந்த துப்பாக்கி சூடு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மொரட்டுவை விடுதி உரிமையாளர் மீது துப்பாக்கிச் சூடு நடத்துவதற்காக வந்தவர்களாலேயே இந்த சம்பவமும் நடத்தப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
துப்பாக்கிச் சூடு
மொரட்டுவையில் துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் காரில் தப்பிச் செல்லும் போது, வாகனத்தில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறு காரணமாக பிலியந்தலை, சுவரபொல பகுதியில் கார் பழுதடைந்துள்ளது.
இதன்போது அவர்கள் வானத்தை நோக்கிச் சுட்டுவிட்டு அருகில் இருந்த மோட்டார் சைக்கிள் ஒன்றை எடுத்துக்கொண்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

