Last Updated:
சீனாவில் அதிக அளவில் தயாரிக்கப்படும் ஆப்பிள் நிறுவனப் பொருட்களின் பங்குகள் 9 விழுக்காடு சரிவை சந்தித்தன.
அமெரிக்காவின் புதிய இறக்குமதி வரி விதிப்பு காரணமாக, அந்நாட்டு பங்குசந்தை நேற்று ஒரே நாளில் 176 லட்சம் கோடி ரூபாய் சரிவை சந்தித்துள்ளது.
பிற நாடுகள் விதிக்கும் வரிகளுக்கு ஏற்ப அமெரிக்கா வரிகளை மாற்றி அமைக்கப்போவதாக அந்நாட்டு அதிபர் டிரம்ப் ஏற்கெனவே தெரிவித்திருந்தார். அதன்படி, இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி ஆகும் பொருட்களுக்கு 26 சதவீதம் வரி விதிக்கப்படும் என்று டிரம்ப் தற்போது அறிவித்துள்ளார்.
இந்நிலையில், அதன் எதிரொலியாக அந்நாட்டு பங்குசந்தை சரிவுடன் வர்த்தகத்தை தொடங்கியது. குறிப்பாக, அமெரிக்காவில் பிரபலமான எஸ் என்ட் பி 500 இன்டெக்ஸ் (S&P500 INDEX) பங்குசந்தை நேற்று ஒரே நாளில் இந்திய ரூபாய் மதிப்பில் 176 லட்சம் கோடி ரூபாய் சரிவை சந்தித்தது.
Also Read: Trump Tariffs: இந்திய பொருட்கள் மீதான இறக்குமதி வரி உயர்வு.. பட்டயக் கணக்காளர்களின் கருத்து என்ன?
இதில், சீனாவில் அதிக அளவில் தயாரிக்கப்படும் ஆப்பிள் நிறுவனப் பொருட்களின் பங்குகள் 9 விழுக்காடு சரிவை சந்தித்தன.
இதே போன்று, வியட்நாமில் உற்பத்தி ஆலை வைத்துள்ள நைக் நிறுவனத்தின் பங்குகள் 12 சதவிகிதம் சரிந்தன. எஸ் என்ட் பி 500 இன்டெக்ஸில் (S&P500 INDEX) உள்ள 500 நிறுவனங்களில் 80 விழுக்காடு நிறுவன பங்குகள் நேற்று கடும் சரிவுடன் வர்த்தகத்தை தொடங்கின. கடந்த 2022ஆம் ஆண்டிற்கு பிறகு, அமெரிக்க பங்குசந்தை மிகப்பெரிய சரிவை சந்தித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
April 04, 2025 11:45 AM IST


