• Login
Wednesday, October 14, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

மொத்தமாக மாறும் GST நடைமுறை.! இது மட்டும் அமலுக்கு வந்தால் சொர்க்கம் தான்.. சூப்பர்ல! | GST Council Big Proposals: How Small Businesses Could Benefit From Easier Rules and Faster Refunds

GenevaTimes by GenevaTimes
October 14, 2026
in இந்தியா
Reading Time: 2 mins read
0
மொத்தமாக மாறும் GST நடைமுறை.! இது மட்டும் அமலுக்கு வந்தால் சொர்க்கம் தான்.. சூப்பர்ல! | GST Council Big Proposals: How Small Businesses Could Benefit From Easier Rules and Faster Refunds
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Business

oi-Vigneshkumar

Time
Updated: Wednesday, October 14, 2026, 15:59 [IST]

சென்னை: ஜிஎஸ்டி கவுன்சிலில் வரி முறைகளை தாண்டி இந்த முறை பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்பட்டன. தொழில் தொடங்குவது மற்றும் அதை விரிவுபடுத்துவதை எளிமையாக்க பல்வேறு விதிகள் விவாதிக்கப்பட்டன. அவை என்ன.. இதன் மூலம் சிறு குறு நிறுவனங்கள் எந்தளவுக்கு பலன் தரும் என்பது தொடர்பாக பார்க்கலாம்!

ஒரு சிறிய தொழிலதிபர் தனது பொருளை விற்பனை விற்கிறார் என வைத்து கொள்வோம். அவரது பொருள் நன்றாக இருக்கிறது. வாடிக்கையாளர்கள் அதிகரிக்கிறார்கள், விற்பனையும் நன்றாக இருக்கிறது. இதனால் மற்ற மாநிலங்களிலும் விற்பனையை தொடங்கவும், ஆன்லைன் வர்த்தக தளங்களில் பொருட்களை விற்பனை செய்யவும் அவர் திட்டமிடுகிறார்.

GST Council

ஜிஎஸ்டி

ஆனால் ஒவ்வொரு மாநிலத்திலும் பதிவு செய்வது, ஜிஎஸ்டி பணத்தை திரும்ப பெறுவதற்காக காத்திருப்பது, வரி கணக்குகளில் ஏற்படும் முரண்பாடுகளுக்கு விளக்கம் அளிப்பது எனப் பல சிக்கல்கள் அவருக்கு ஏற்படுகின்றன. பிஸ்னஸை பார்த்து அதை டெவலப் செய்ய செலவிட வேண்டிய நேரத்தை விட வரி தொடர்பான நடைமுறைகளுக்காக செலவிட வேண்டிய நேரம் அதிகமாக இருக்கும் சூழல் உருவாகிறது.

2017ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட ஜிஎஸ்டியின் முக்கிய நோக்கங்களில் ஒன்று, நாடு முழுவதும் பிஸ்னஸ் செய்வதை எளிதாக்குவதாகும். இருப்பினும், நடைமுறையில் பல தொழில்கள் இன்னும் பல்வேறு சிக்கல்களை சந்தித்து வருகின்றன. இதை கருத்தில் கொண்டு, அண்மையில் நடைபெற்ற 57வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் வரி விகிதங்கள் மட்டுமின்றி, வரி நடைமுறைகளை எளிமைப்படுத்துவது குறித்தும் பல பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

சீனா கண் அசைத்தால் போதும்.. உலக EV பேட்டரி சந்தையை காலி.. இந்தியாவுக்கு இவ்வளவு பெரிய சிக்கல் ஏன்?

சீனா கண் அசைத்தால் போதும்.. உலக EV பேட்டரி சந்தையை காலி.. இந்தியாவுக்கு இவ்வளவு பெரிய சிக்கல் ஏன்?

முக்கிய பிரச்சனை

ஜிஎஸ்டி பதிவு செய்வதிலும், ஏற்கெனவே உள்ள பதிவுகளில் மாற்றங்களை செய்வதிலும் ஏற்படும் தாமதம் சிறு தொழில்களுக்கு முக்கிய பிரச்சினையாக உள்ளது. இதற்கு தீர்வாக, ஜிஎஸ்டி பதிவில் செய்யப்படும் பெரும்பாலான மாற்றங்களுக்கு இணையதளம் மூலமாக தானியங்கி ஒப்புதல் வழங்கும் முறையை அறிமுகப்படுத்த கவுன்சில் பரிந்துரைத்துள்ளது. இது நடைமுறைக்கு வந்தால், வழக்கமான சிறு சிறு மாற்றங்களுக்கு கூட அதிகாரிகளின் ஒப்புதலுக்கு காத்திருக்கும் நேரம் குறையலாம்.

மேலும், சொந்த அலுவலக கட்டிடம் இல்லாத மாநிலங்களிலும் ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் மூலம் பொருட்களை விற்பனை செய்யும் சிறு வணிகர்கள், அந்த தளத்தின் கிடங்கையே தங்களது பதிவு முகவரியாகப் பயன்படுத்த அனுமதிக்கப்படலாம். இதன் மூலம் சுமார் 9.5 லட்சம் சிறு விற்பனையாளர்கள் ஒவ்வொரு மாநிலத்திலும் தனியாக அலுவலகம் அமைக்காமலேயே விற்பனையை விரிவுபடுத்த முடியும்.

ரத்தன் டாடா இருந்திருந்தால் இது நடந்திருக்குமா? வெடிக்கும் போட்டி.. நீதிமன்றத்தை நாடிய நோயல் டாடா

ரத்தன் டாடா இருந்திருந்தால் இது நடந்திருக்குமா? வெடிக்கும் போட்டி.. நீதிமன்றத்தை நாடிய நோயல் டாடா

பல வாரங்கள் கூட ஆகலாம்

ஒரு நிறுவனம் மூலப்பொருட்களை வாங்கும்போது ஜிஎஸ்டி செலுத்துகிறது. அந்த தொகையைத் திரும்ப பெற வேண்டிய சூழலில், பணம் கிடைக்க பல வாரங்கள் அல்லது மாதங்கள் காத்திருக்க வேண்டியிருக்கலாம். பணம் இதுபோல முடங்கி கிடப்பதால் இந்த தாமதம் நிறுவனத்தின் அன்றாட செயல்பாடுகளையும் பாதிக்கிறது. இதை சரிசெய்ய, தொகை திரும்ப பெற அதிகாரியின் ஒப்புதலுக்காக காத்திருக்காமல் தானாகவே திரும்ப வழங்குவதற்கான பரிந்துரை முன்வைக்கப்பட்டுள்ளது.

அதேபோல மூலப்பொருட்களுக்கு அதிக வரி செலுத்தி, இறுதி பொருட்களுக்கு குறைவான வரி விதிக்கப்படும் சில சூழல்களிலும், தகுதியான தொகையில் 90 சதவீதத்தை முன்கூட்டியே வழங்கும் திட்டமும் முன்மொழியப்பட்டுள்ளது. இது அமல்படுத்தப்பட்டால், தொழில்களுக்குத் தேவையான பணம் விரைவாகக் கிடைக்க உதவும். அதாவது பணம் அரசு கஜானாவில் சிக்கி, கேஷ் ப்ளோ பாதிக்கப்படுவது இதன் மூலம் தடுக்கப்படும்.

உள்ளீட்டு வரி சலுகை

ஜிஎஸ்டியில் உள்ளீட்டு வரி சலுகை (ITC) என்பது, பொருட்களை வாங்கும்போது செலுத்திய வரியை, விற்பனையின்போது செலுத்த வேண்டிய வரியில் கழித்து கொள்ளும் வசதியாகும். இதன் மூலம் ஒரே பொருளுக்கு அடுத்தடுத்த கட்டங்களில் மீண்டும் மீண்டும் வரி செலுத்தும் சுமை குறைகிறது. ஆனால், ஒரு நிறுவனம் தனது சப்ளையரிடம் பொருட்களை வாங்கி, அதற்கான ஜிஎஸ்டியையும் செலுத்தியிருந்தாலும், அந்த சப்ளையர் அரசிடம் வரியை செலுத்த தவறினால் சிக்கல் ஏற்படலாம். இதனால், வாங்கிய நிறுவனம் ஏற்கெனவே பெற்ற வரி சலுகையை திருப்பி செலுத் வேண்டிய நிலைகூட உருவாகலாம்.

இதுபோன்ற நடைமுறைகளால் பாதிக்கப்படாமல் இருக்க சில பாதுகாப்பு வழிமுறைகளை உருவாக்க கவுன்சில் பரிந்துரைத்துள்ளது. இது குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட குழுவும் மூன்று மாதங்களுக்குள் அறிக்கை அளிக்க உள்ளது.

புதிய யோசனைகள்

அதேபோல இலவசமாக, அதாவது sampleக்காக பொருட்களை வழங்குவது, காலாவதியான பொருட்களை அழித்தல் போன்ற சில செலவுகளுக்கும் குறிப்பிட்ட நிபந்தனைகளின் அடிப்படையில் உள்ளீட்டு வரி சலுகை வழங்க முடியுமா என்பதை ஆராயவும் கவுன்சில் திட்டமிட்டுள்ளது. இது அமலுக்கு வந்தால்.. மருந்து நிறுவனங்கள், நுகர்வோர் பொருட்களை தயாரிக்கும் நிறுவனங்கள் உள்ளிட்ட பல தொழில்களின் செலவு சுமை குறைய வாய்ப்புள்ளது.

மேலும், சப்ளையர்கள் அனுப்பும் வரி ரசீதுகளை சரிபார்க்கும் புதிய நடைமுறையும் முன்மொழியப்பட்டுள்ளது. அதில் ரசீதுகளை ஏற்றுக்கொள்வது, நிராகரிப்பது அல்லது பின்னர் சரிபார்ப்பதற்காக நிலுவையில் வைப்பது போன்ற வசதிகள் இருக்குமாம். இதன் மூலம் வரி கணக்குகளில் உள்ள தவறுகளை முன்கூட்டியே கண்டறிந்து சரிசெய்ய முடியும்.

மிக முக்கிய பரிந்துரை

திட்டமிட்டு வரி ஏய்ப்பு செய்வதற்கும், தவறுதலாக கணக்கில் பிழை ஏற்படுவதற்கும் ஒரே தண்டனை என்பது சரியாக இருக்காது. மோசடி நோக்கம் இல்லாத தவறுகளுக்கான அபராதங்களை குறைக்கவும், விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்புவதற்கான குறைந்தபட்ச வரம்பை உயர்த்தவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

மாநிலங்களுக்கு இடையே சரக்குகளைக் கொண்டு செல்லும் லாரிகளை சோதனை செய்வதிலும் மாற்றங்கள் முன்மொழியப்பட்டுள்ளன. லாரிகளை இடைமறித்து சோதனையிட மூத்த அதிகாரியின் எழுத்துப்பூர்வ அனுமதி தேவை என்பது முன்மொழியப்பட்டுள்ளது.. மேலும், போக்குவரத்தின்போது சரக்குகளையும் வாகனங்களையும் பறிமுதல் செய்யும் நடவடிக்கைகளிலும் மாற்றம் கொண்டுவரத் திட்டமிடப்பட்டுள்ளது. இது தேவையற்ற இடையூறுகளை குறைக்கும்!

ஒப்புதல்கள்

ஜிஎஸ்டி நடைமுறைகளை எளிமைப்படுத்துவது மட்டுமே தொழில்களுக்கான அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வாகிவிடாது. தொழில் தொடங்குவதற்கும், ஊழியர்களை பணியமர்த்துவதற்கும், நிறுவனத்தை விரிவுபடுத்துவதற்கும் பல்வேறு உரிமங்கள் மற்றும் அரசு துறை ஒப்புதல்கள் தேவைப்படுகின்றன.

இதற்காக தேசியளவில் ஒற்றைச் சாளர அமைப்பு (National Single Window System) போன்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறையின் ‘Know Your Approval’ முறையில், 32 மத்திய அமைச்சகங்கள் மற்றும் துறைகளின் கீழ் 698 ஒப்புதல்களும், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 7,300க்கும் மேற்பட்ட ஒப்புதல்களும் இடம்பெற்றுள்ளன.

எல்லாம் ஓகே.. ஆனால்..!

இருப்பினும், விதிமுறைகளை அறிவிப்பது மட்டுமே போதாது. அவற்றை அனைத்து மாநிலங்களும் ஒரே மாதிரியாக செயல்படுத்துவதும், தொழில் நிறுவனங்களுக்கு விதிகள் குறித்த தெளிவான விளக்கங்கள் கிடைப்பதும் அவசியம். மொத்தத்தில், ஜிஎஸ்டி கவுன்சிலின் பரிந்துரைகள் நடைமுறைக்கு வந்து முறையாக செயல்படுத்தப்பட்டால் அது சிறு தொழில்கள் முதல் பெரிய நிறுவனங்கள் வரை பலவற்றுக்கு வரப்பிரசாதமாக இருக்கும். செலவும் நேரமும் கணிசமாக குறையும். ஆனால் அவை நடைமுறைக்கு வருமா என்பதற்கு காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.

English summary

The 57th GST Council meeting proposed several measures to simplify GST registration, speed up tax refunds(ஜிஎஸ்டி கவுன்சில்கள் அளித்த பரிந்துரைகள்): GST Council Big Proposals latest news in tamil.

Read More

Previous Post

ஜோன்ஸ்டனுக்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

Next Post

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் பங்குச்சந்தையில் நுழையும் ஜியோ.. 27 கோடி பங்குகளை வெளியிட திட்டம் | வணிகச் செய்திகள்

Next Post
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் பங்குச்சந்தையில் நுழையும் ஜியோ.. 27 கோடி பங்குகளை வெளியிட திட்டம் | வணிகச் செய்திகள்

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் பங்குச்சந்தையில் நுழையும் ஜியோ.. 27 கோடி பங்குகளை வெளியிட திட்டம் | வணிகச் செய்திகள்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin