தேசிய நலன் சார்ந்த அனைத்து விடயங்களையும் நாட்டின் உயர்மட்டத் தலைவர் மொஜ்தபா கமேனி மிகவும் விவேகத்துடன் கையாண்டு வருவதாகவும், அவரது ஒப்புதல் இன்றி எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை என்றும் ஈரானிய வெளியுறவு அமைச்சகத்தின் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
மறைந்த ஈரானிய உயர்மட்டத் தலைவர் அலி கமேனியின் மகனான மொஜ்தபா, போர் ஆரம்பத்தில் அவரது தந்தை கொல்லப்பட்ட அமெரிக்க-இஸ்ரேலியத் தாக்குதலுக்குப் பிறகு பொதுவெளியில் எங்கும் தென்படவில்லை.
அதன் பின்னர் அவர் அரச ஊடகங்கள் வாயிலாக வெளியிடப்படும் எழுத்துப்பூர்வமான அறிக்கைகள் மூலமாகவே தொடர்புகளைப் பேணி வருகின்றார்.
போரின் போது அவர் கடுமையான காயங்களுக்கு உள்ளானதாக செய்திகள் வெளியாகியிருந்தன.
முக்கிய சந்திப்பு
கடந்த மார்ச் மாதம் அமெரிக்கப் பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத், மொஜ்தபா கமேனி அநேகமாக உருக்குலைந்திருக்கலாம் எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், ஈரானிய ஜனாதிபதி நாட்டின் உயர்மட்டத் தலைவருடன் சுமார் இரண்டரை மணிநேரம் நீடித்த முக்கிய சந்திப்பொன்றை நடத்தியதாக ஈரானின் IRIB ஒளிபரப்பு நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

