Last Updated:
வெவ்வேறு நாடுகளில் விதவிதமான நில அமைப்புகள் உள்ளன. இவை அங்கு வரும் சுற்றுலா பயணிகளை கவர்வது மட்டுமின்றி அந்த நாடுகளுக்கு ஒரு அடையாளத்தை கொடுக்கின்றன.
உலகில் ஏராளமான நாடுகளில் குளிர்ச்சி அதிகம் காணப்படும். ஒவ்வொரு நாடுகளிலும் ஒரு சிறப்பான அம்சங்கள் இருக்கும். சில நாடுகள் பள்ளத்தாக்குகளில் அமைந்திருக்கும். சில நாடுகள் கடல் மட்டத்திலிருந்து அதிக உயரத்தில் அமைந்திருக்கும்.
உலகில் வெவ்வேறு நாடுகளில் விதவிதமான நில அமைப்புகள் உள்ளன. இவை அங்கு வரும் சுற்றுலா பயணிகளை கவர்வது மட்டுமின்றி அந்த நாடுகளுக்கு ஒரு அடையாளத்தை கொடுக்கின்றன. இந்த பதிவில் நாம் உலகிலேயே மிகவும் குளிர்ச்சி நிறைந்த நாடு எது என்பது குறித்து பார்க்கலாம்.
தற்போது இந்தியாவில் கோடைகால வெயில் கடுமையாக வாட்டி வதைத்து வருகிறது. இந்த சூழலில் குளிர்ச்சியான பிரதேசங்களுக்கு செல்லலாமா என்ற எண்ணத்தில் பொதுமக்கள் இருக்கிறார்கள். இந்தியாவில் மலைப் பாங்கான இடங்களில் தற்போது வெப்பநிலை சற்று குறைவாக காணப்படுகிறது.
இதனால் இமாச்சலப் பிரதேசம், சிம்லா, டார்ஜிலிங் உள்ளிட்ட பகுதிகளுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல விரும்புகின்றனர். இவை ஒரு பக்கம் இருக்க, உலகிலேயே குளிர்ச்சி அதிகம் கொண்ட நாடு எது என்பது குறித்த தகவல்கள் இணையத்தில் தற்போது கவனம் பெற தொடங்கியுள்ளன.
இந்த கேள்விக்கான விடை ரஷ்யா ஆகும். இங்கு மைனஸ் 50 டிகிரி செல்சியஸுக்கும் குறைவான வெப்பநிலை காணப்படுகிறது. ரஷ்யாவின் தலைநகரான மாஸ்கோ ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய நகரமாக கருதப்படுகிறது. தற்போதைய நிலவரப்படி ரஷ்யாவில் சுமார் 15 கோடி பேர் வசிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
உலகிலேயே மிகவும் நீளமான ரயில் பாதை அமைப்பு இங்குதான் உள்ளது. தற்போது ரஷ்யா நாடு உக்ரைனுக்கு எதிரான போரில் தீவிரம் காட்டி வருகிறது. உக்ரைன் நாடு நேட்டோ அமைப்பில் சேர்வதற்கு முயற்சி மேற்கொண்ட நிலையில், அது தங்களது பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும் என்று கூறி ரஷ்ய ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது.
June 25, 2025 8:06 PM IST
மைனஸ் 50 டிகிரியில் வாட்டி வதைக்கும் குளிர்.. உலகிலேயே மிகவும் குளிரான நாடு எது தெரியுமா?


