Last Updated:
ஆடுகளத்தை இரண்டரை மீட்டர் தூரம் நின்று மட்டுமே பார்வையிட வேண்டும் என மைதானப் பராமரிப்பாளர் கட்டுப்பாடு விதித்ததாகக் கூறப்படுகிறது
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் கவுதம் கம்பீருக்கும் லண்டன் ஓவல் மைதானத்திலேயே பராமரிப்பாளருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் பெருமளவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் இந்திய அணியின் பயிற்சியாளர் கம்பீருக்கு ஆதரவாக கேப்டன் சுப்மன் கில் கருத்து தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது. இந்தத் தொடரில் இங்கிலாந்து அணி 2 போட்டிகளில் வெற்றி பெற்று 2-1 ஒன்று என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் இன்று கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதற்கிடையே மைதானத்தின் பராமரிப்பாளரான லீப் போட்டிஸ் என்பவருக்கும் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீருக்கும் இடையே கடும் வாக்குவாதம் சமீபத்தில் ஏற்பட்டது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
அதாவது ஆடுகளத்தை இரண்டரை மீட்டர் தூரம் நின்று மட்டுமே பார்வையிட வேண்டும் என மைதானப் பராமரிப்பாளர் கட்டுப்பாடு விதித்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து கம்பீர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதன் பின்னர் ஆடுகளத்திற்குள் இங்கிலாந்து அணியின் பயிற்சியாளர் பிரெண்டன் மெக்கல்லம் நின்று கொண்டிருந்த புகைப்படங்கள் இந்திய அணி ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டன.
இந்தச் சம்பவம் கிரிக்கெட் உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து கருத்து தெரிவித்த இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில், “மைதானத்தைப் பார்வையிடுவதற்கு பயிற்சியாளர் என்கிற அடிப்படையில் அவருக்கு அனைத்து உரிமையும் உள்ளது. மைதானத்தை, ஆடுகளத்தை வெறும் காலுடன் அல்லது ரப்பர் ஸ்பைக் கொண்ட ஷூ அணிந்து பார்வையிடும்போது அதனால் ஆடுகளத்துக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது.
July 31, 2025 3:46 PM IST