• Login
Tuesday, March 3, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

மைசூரு நில முறைகேடு வழக்கில் சித்தராமையாவிடம் லோக் ஆயுக்தா போலீஸார் விசாரணை | Karnataka CM Siddaramaiah questioned by Lokayukta police

GenevaTimes by GenevaTimes
November 7, 2024
in இந்தியா
Reading Time: 5 mins read
0
மைசூரு நில முறைகேடு வழக்கில் சித்தராமையாவிடம் லோக் ஆயுக்தா போலீஸார் விசாரணை | Karnataka CM Siddaramaiah questioned by Lokayukta police
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


பெங்களூரு: கர்நாடக முதல்வர் சித்தராமையா மீதான நில முறைகேடு வழக்கில் லோக் ஆயுக்தா போலீஸார் நேற்று அவரிடம் 2 மணி நேரம் தீவிர விசாரணை நடத்தினர். முதல்வர் பதவியை ராஜினாமா செய்யக்கோரி சித்தராமையாவுக்கு எதிராக பாஜகவினர் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

கர்நாடக முதல்வர் சித்தரா மையா மனைவி பார்வதிக்கு சொந்தமான நிலத்தை கையகப்படுத்திய தற்காக, மைசூரு மாநகர மேம்பாட்டு கழகம் அவருக்கு மாற்று நிலம் ஒதுக்கியது. கையகப்படுத்திய நிலத்தின் மதிப்பை விட, மாற்றாக வழங்கப்பட்ட நிலத்தின் மதிப்பு பன்மடங்கு அதிகமாக இருந்ததால் சித்தராமையா மீது நில‌ முறைகேடு வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை அமலாக்கத்துறையும் லோக் ஆயுக்தா அதிகாரிகளும் விசாரித்து வருகின்றனர்.

இதனிடையே லோக் ஆயுக்தாஅதிகாரிகள் கடந்த வாரம் சித்தராமையாவின் மனைவி பார்வதி, உறவினர்கள் மல்லிகார்ஜுன சுவாமி, தேவராஜ் ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். மைசூரு நகர மேம்பாட்டு கழக அலுவலக‌த்தில் காணாமல் போனதாக கூறப்பட்ட ஆவணங்கள் தொடர்பாகவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் விசாரணை நடத்தினர்.

2 மணி நேரம்… இந்நிலையில் நவம்பர் 6-ம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு சித்தராமையாவுக்கு நோட்டீஸ் அனுப்பினர். அதன்பேரில் அவர் நேற்று காலை 10 மணிக்கு மைசூரு லோக் ஆயுக்தா அலுவலகத்தில் ஆஜரானார். அவரிடம் 7 பேர் கொண்ட அதிகாரிகள், நில முறைகேடு வழக்கு குறித்து 50-க்கும்மேற்பட்ட கேள்விகளை எழுப்பினர். 2 மணி நேர விசாரணைக்கு பிறகுவெளியே வந்த முதல்வர் சித்தராமையா, ‘‘லோக் ஆயுக்தா அதிகாரிகள் கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் கோஷம் பதிலளித்தேன். உண்மையான தகவல்களை தெரிவித்தேன். இது என் மீது தொடரப்பட்ட பொய்யான வழக்கு. இதில் இருந்து நான் நிச்சயம் விடுதலை ஆவேன். நான் அனைத்து கேள்விகளுக்கும் உரிய முறையில் பதில் அளித்துவிட்டதால், மீண்டும்விசாரணைக்கு வர சொல்ல வில்லை” என்றார்.

பாஜகவினர் போராட்டம்: இந்நிலையில் மைசூரு ராமசாமி சதுக்கத்தில் பாஜக எம்எல்ஏ டி.எஸ்.வத்சா தலைமையில் பாஜகவினர் சித்தராமையாவுக்கு எதிராக போராட்டம் நடத்தினர். அப்போது சித்தராமையா முதல்வர்பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் எனவும், இந்த வழக்கைசிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் எனவும் எழுப்பினர். பாஜகவினர் சாலை மறியலில் ஈடுபட முயன்றதால் போலீஸார் அவர்களை கைது செய்து, மாலையில் விடுவித்தனர். பாஜகவினர் போராட்டம் நடத்தியதால் சில மணி நேரம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதனிடையே சமூக செயற்பாட்டாளர் சினேகமயி, முதல்வர் சித்தராமையா மீதான வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக்கோரி தொடர்ந்த வழக்கு நேற்று கர்நாடக உயர் நீதிமன்றத்தில் விசார ணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, இவ்வழக்கில் நவம்பர் 26-ம் தேதிக்குள்பதில் மனு தாக்கல் செய்யுமாறு சித்தராமையாவுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.



Read More

Previous Post

Tamilmirror Online || வாக்களிக்க மறுத்தவரின் உறவை முறித்த பெண்

Next Post

சாம்பியன்ஸ் டிராபி… பாகிஸ்தானின் பரிந்துரையை பரிசீலிக்குமா இந்தியா?

Next Post
சாம்பியன்ஸ் டிராபி… பாகிஸ்தானின் பரிந்துரையை பரிசீலிக்குமா இந்தியா?

சாம்பியன்ஸ் டிராபி... பாகிஸ்தானின் பரிந்துரையை பரிசீலிக்குமா இந்தியா?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin