ஐபிஎல் 2025 மீண்டும் தொடங்குவதாக பிசிசிஐ ஞாயிற்றுக்கிழமை இரவு அதிகாரப்பூர்வ செய்திக்குறிப்பில் அறிவித்தது. இந்தியா-பாகிஸ்தான் இடையே நிலவி வரும் பதற்றம் காரணமாக ஐபிஎல் தொடர் பாதியிலேயே நிறுத்தி வைக்கப்பட்டது. இப்போது ஒரு புதிய அறிக்கையில், ஐபிஎல் 2025 மே 17 ஆம் தேதி மீண்டும் தொடங்கும் என்று பிசிசிஐ ரசிகர்களுக்கு அறிவித்துள்ளது, ஆர்சிபி மற்றும் கே.கே.ஆர் மோதும் 58வது லீக் மேட்ச், பெங்களூரில் மீண்டும் தொடங்கும். இதற்கிடையில், ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பைனல் எங்கே நடைபெறும் என்ற தகவல் இன்னும் வெளியாகவில்லை. இதேபோல், தகுதிச்சுற்று 1, எலிமினேட்டர், தகுதிச்சுற்று 2 நடக்கும் இடங்களும் இன்னும் முடிவாகவில்லை.

