Last Updated:
சீனப் பொருட்களுக்கு 50 சதவிகித கூடுதல் வரி விதித்ததால், அமெரிக்காவில் சீனப் பொருட்களின் வரி 104 சதவிகிதமாக உயர்ந்துள்ளது.
சீனாவிற்கு மேலும் 50 சதவிகித கூடுதல் வரி விதிப்பால் சீனப் பொருட்கள் மீதான வரி அமெரிக்காவில் 104 சதவிகிதமாக உயர்ந்துள்ளது.
அமெரிக்க அதிபராக பதவியேற்ற டிரம்ப், அந்நாட்டுப் பொருட்களின் மீது அதிக இறக்குமதி வரி விதிக்கும் இந்தியா, சீனா போன்ற நாடுகளின் பொருட்களுக்கு அமெரிக்காவிலும் அதே அளவுக்கு பரஸ்பர வரி விதிக்கப்படும் என்று அறிவித்திருந்தார். இந்த வரி விதிப்பு கடந்த 2 ஆம் தேதி முதல் அமலுக்கு வந்தது.
அதன்படி, இந்தியப் பொருட்களின் இறக்குமதிக்கு 27 சதவிகிதமும், சீனாவுக்கு 34 சதவிகிதமும், வங்கதேசத்திற்கு 37 சதவிகிதமும் என ஒவ்வொரு நாடுகளுக்கும் வரி விதிக்கப்பட்டிருந்தது.
அமெரிக்காவின் இந்த வரி விதிப்புக்கு பல்வேறு நாடுகள் கடும் அதிருப்தி தெரிவித்தன. இதனைத் தொடர்ந்து, அமெரிக்காவின் அனைத்துப் பொருட்களுக்கும் 34 சதவிகிதம் இறக்குமதி வரி விதிக்கப்படும் என சீனா அறிவித்திருந்தது.
இந்த வரியை நீக்காவிட்டால் சீன இறக்குமதிப் பொருட்களுக்கு அமெரிக்காவில் கூடுதலாக 50 சதவிகிதம் வரி விதிக்கப்படும் என டிரம்ப் எச்சரித்திருந்தார். ஆனால் அதற்கு சீனா மறுப்பு தெரிவித்துவிட்டது.
இதையும் படிக்க: “அமெரிக்க அரசு ஊழியர்கள் சீன குடிமக்களுடன் பாலியல் உறவு கொள்ளக்கூடாது” – அமெரிக்க அரசு
இந்த நிலையில், இதையடுத்து சீனப் பொருட்கள் அனைத்திற்கும் கூடுதலாக 50 சதவிகித வரி விதிக்கப்படும் என டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். இதனால் சீன பொருட்களுக்கான அடிப்படை வரியாக 10%, ஏற்கனவே அமலில் உள்ள 10%, தற்போது புதிதாக டிரம்ப் விதித்த வரி 34% மற்றும் தற்போது அமெரிக்க அரசு உயர்த்தியுள்ள 50% என சீனப் பொருட்கள் மீதான வரி அமெரிக்காவில் மொத்தம் 104 சதவிகிதமாக உயர்ந்துள்ளது.
April 09, 2025 7:55 AM IST
மேலும் 50% வரி..! சீன பொருட்களுக்கு மொத்தம் 104% – அமெரிக்கா அதிபர் டிரம்ப் அதிரடி அறிவிப்பு


