கொல்கத்தா: தமிழகம், மேற்குவங்கம் உட்பட 12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி தொடங்கி உள்ளது.
மேற்கு வங்கத்தில் ஆட்சி நடத்தும் திரிணமூல் காங்கிரஸ் அரசு, வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிக்கு ஆரம்பம் முதலே எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்த சூழலில் தேர்தல் ஆணையம் சார்பில் 1950 என்ற உதவி எண் அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த எண்ணில் மேற்கு வங்க வாக்காளர் திருத்தப் பணி தொடர்பான கோரிக்கை, புகார்களையும் பதிவு செய்யலாம். புகார்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படும்.
தேர்தல் ஆணையம் சார்பில் தேசிய அளவில் 1800 – 11 – 1950 என்ற என்ற கட்டணமில்லா தொலைபேசி எண் பயன்பாட்டில் உள்ளது. இந்த எண்ணிலும் புகார்களை பதிவு செய்யலாம். complaints@eci.gov.in என்ற இ-மெயில் முகவரிக்கும் புகார்களை அனுப்பலாம். மேலும் தேர்தல் அலுவலர்கள், அலுவலகங்களில் நேரடியாகவும் புகார் மனுக்களை அளிக்கலாம் என்று மாநில தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

