சிக்னலை மீறி சரக்கு ரயிலை ஓட்டுநர் இயக்கியதே கஞ்சன்ஜங்கா விரைவு ரயில் விபத்துக்கு காரணம் என்று ரயில்வே ஆணையம் விளக்கமளித்துள்ளது.
திரிபுரா மாநிலம் அகர்தலாவில் இருந்து மேற்குவங்கத்தில் உள்ள சியல்டாவை நோக்கி கஞ்சன்ஜங்கா விரைவு ரயில் சென்றது. அப்போது டார்ஜிலிங் மாவட்டத்தில் உள்ள ருயிதாஸா என்ற இடத்தில் பயணிகள் ரயில் மீது சரக்கு ரயில் பின்பக்கமாக மோதியது. இதில், பயணிகள் விரைவு ரயிலின் பெட்டிகள் தடம்புரண்டு தண்டவாளத்தில் கவிழ்ந்தன.
இதில், 9 பேர் உடல் நசுங்கி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாகவும் மேலும், படுகாயம் அடைந்த 25 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையடுத்து விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் தேசிய நிவாரண நிதியில் இருந்து 2 லட்சம் ரூபாய் வழங்கப்படும், படுகாயம் அடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும் என்றும் பிரதமர் மோடி அறிவித்துள்ளார். விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 10 லட்ச ரூபாயும், படுகாயம் அடைந்தவர்களுக்கு இரண்டரை லட்சம், லேசான காயம் அடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாயும் நிவாரணம் வழங்கப்படும் என்று ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.
இதையும் படிங்க : இந்தியாவில் நடந்த மிகவும் மோசமான ரயில் விபத்துகள்… மீள்பார்வை!
விபத்திற்கு காரணம்
இதற்கிடையே கஞ்சன்ஜங்கா விரைவு ரயில் விபத்து குறித்து ரயில்வே ஆணையம் விசாரணையை தொடங்கியது. அதன்படி சிக்னலில் சரக்கு ரயில் நிற்காமல் வந்ததே விபத்திற்கு காரணம் என்று முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது. சரக்கு ரயில் ஓட்டுநர் சிக்னலை மீறி இயக்கியதால் விபத்து நிகழ்ந்ததாக ரயில்வே ஆணையத் தலைவர் ஜெய வர்மா சின்ஹா தெரிவித்துள்ளார்.
விபத்தில் சரக்கு ரயிலின் ஓட்டுநர் மற்றும் கஞ்சன்ஜங்கா பயணிகள் விரைவு ரயிலில் இருந்த GUARD உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
.
&w=750&resize=750,375&ssl=1)
