• Login
Monday, September 28, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

மேற்கு வங்கத்திலும் கால்பதிக்கும் விஜய்யின் தவெக.. தமிழ்நாடு ஸ்டைலில் பாலிடிக்ஸ் செய்ய திட்டம் | TVK West Bengal unit: Opens First Party Office in Eastern state, Plans Social Outreach Before polls

GenevaTimes by GenevaTimes
September 28, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
மேற்கு வங்கத்திலும் கால்பதிக்கும் விஜய்யின் தவெக.. தமிழ்நாடு ஸ்டைலில் பாலிடிக்ஸ் செய்ய திட்டம் | TVK West Bengal unit: Opens First Party Office in Eastern state, Plans Social Outreach Before polls
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


India

oi-Vigneshkumar

Time
Updated: Monday, September 28, 2026, 16:28 [IST]

கொல்கத்தா: தமிழ்நாடு தேர்தலில் வென்று ஆட்சியை பிடித்த விஜய்யின் தவெக இப்போது மற்ற மாநிலங்களிலும் தனது கட்சியை விரிவுபடுத்தும் பணிகளில் இறங்கியுள்ளது. இது தொடர்பாக கடந்த சில காலமாகவே தகவல்கள் வெளியாகி வந்த நிலையில், இ்பபோது நாட்டின் கிழக்கு மாநிலமான மேற்கு வங்கத்தில் கட்சியின் முதல் அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது.

நடிகராக இருந்த விஜய் கடந்த 2024ம் ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கினார். அதன் பிறகும் கூட படங்களிலேயே கவனம் செலுத்தி வந்த விஜய், கடந்தாண்டு தான் தீவிர அரசியலில் குதித்தார். சுமார் ஓராண்டுக்கும் குறைவான காலமே அவர் தீவிர அரசியலில் இருந்தார். இருப்பினும், 2026 சட்டசபை தேர்தலில் வென்று விஜய் ஆட்சியை பிடித்தார்.

TVK West Bengal TVK West Bengal

விரிவுபடுத்தும் நடவடிக்கை

விஜய் ஆட்சியை அமைத்து சில மாதங்களே ஆகும் நிலையில், அவர் பிரதமராக வேண்டும் என்ற பேச்சுகளும் அவரது கட்சியில் எழுந்துள்ளது. மேலும், இதற்காக மற்ற மாநிலங்களில் கட்சியை விரிவுபடுத்தும் நடவடிக்கைகளும் தொடர்ந்து எடுக்கப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது.

இதற்கிடையே மேற்கு வங்கத்தில் அரசியல் செயல்பாடுகளை உடனடியாக தொடங்குவதைவிட, மக்களுடன் நேரடியாக தொடர்பை ஏற்படுத்தி சமூகப் பணிகளில் ஈடுபடுவதையே தற்போதைக்கு முக்கிய இலக்காக வைத்துள்ளதாக தவெக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். ஞாயிற்றுக்கிழமை புர்த்வான் மாவட்டத்தில் உள்ள ரெனசான்ஸ் டவுன்ஷிப் அருகே தவெகவின் முதல் அலுவலகம் திறக்கப்பட்டது. மாநிலம் முழுவதும் சமூக பணிகளை விரிவுபடுத்துவதற்கான மையமாக இந்த அலுவலகம் செயல்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

என்ன சொல்கிறார்

இது தொடர்பாக மேற்கு வங்க தவெக மாநில ஒருங்கிணைப்பாளர் சைதாலி ராய் கூறுகையில், “தற்போது சமூக பணிகளுக்கே அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறோம்.
தமிழ்நாட்டில் விஜய் நீண்ட காலமாக சமூக சேவைகள் மூலம் மக்களுடன் தொடர்பை ஏற்படுத்தி வந்தார். மக்களின் பிரச்சினைகளை அறிந்து கொண்டு, அவர்களுக்கு தேவைப்படும் நேரத்தில் உதவியாக நிற்பது மூலம் அவர்களுடன் உறவை உருவாக்கினார்.. இதே அணுகுமுறையை மேற்கு வங்கத்திலும் பின்பற்ற தவெக திட்டமிட்டுள்ளது.

கட்சி அலுவலகங்களை திறப்பதாலும், உறுப்பினர்களை சேர்ப்பதாலும் மட்டும் ஒரு அமைப்பை வலுப்படுத்த முடியாது. முதலில் மக்களை நேரில் சந்தித்து, அவர்களின் பிரச்சினைகளை கேட்டறிந்து, தேவைப்படும் நேரத்தில் உதவ வேண்டும். அதன் மூலமாகவே மக்கள் மத்தியில் நம்பிக்கையை உருவாக்க முடியும்” என்றும் அவர் தெரிவித்தார்.

மேற்கு வங்கம்

மேற்கு வங்கத்தில் கடந்த இரண்டு மாதங்களாகவே தவெக சார்பில் சமூக சேவைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக அக்கட்சி தெரிவித்துள்ளது. புர்த்வான் மட்டுமின்றி, பல்வேறு மாவட்டங்களிலும் இதற்கான பணிகள் தொடங்கியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. மால்டா மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு சக்கர நாற்காலிகள் வழங்கப்பட்டதாகவும், பிர்பூம், முர்ஷிதாபாத், ஹவுரா, கொல்கத்தா உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும் பலர் தற்போது அமைப்பில் இணைந்து வருவதாகவும் சைதாலி ராய் தெரிவித்தார்.

தேர்தலில் போட்டி?

மேற்கு வங்கத்தில் எதிர்காலத்தில் தேர்தலில் போட்டியிடும் திட்டம் உள்ளதா என்ற கேள்விக்கு, தற்போது அதுகுறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என தவெக தரப்பு தெரிவித்துள்ளது. மேற்கு வங்கத்தில் தேர்தலில் போட்டியிடுவது உள்ளிட்ட அனைத்து முடிவுகளையும் தமிழ்நாட்டில் உள்ள கட்சியின் உயர்மட்ட தலைமைதான் எடுக்கும் என்றும் சைதாலி ராய் கூறினார்.

அவர் மேலும், “இப்போது எங்கள் இலக்கு தேர்தல் களம் அல்ல.. மக்களின் வீடுகள்தான்.. மக்களிடம் செல்ல போகிறோம்.. அவர்களுக்கு முதலில் சேவை செய்வோம். தமிழ்நாட்டில் சமூக பணிகள் மூலம் விஜய் மக்களை அணுகியதை போல, மேற்கு வங்கத்திலும் மக்களை நேரடியாக சந்தித்து அவர்களின் பிரச்சினைகளை புரிந்துகொண்டு உதவுவோம். அதன் மூலம் தவெகவை வலுப்படுத்துவோம்” என்றார்.

English summary

Tamilaga Vettri Kazhagam led by Vijay, has opened its first party office in West Bengal(மேற்கு வங்கத்தில் தவெக கிளை தொடக்கம்): TVK West Bengal unit latest news in tamil.

Read More

Previous Post

கிரிஷ் வழக்கு: பிரதிவாதியாக பெயரிடப்பட்டுள்ளார் நாமல் ராஜபக்ச

Next Post

சந்திரசேகரன் Vs நோயல் டாடா: TATA குழுமத்தில் நடக்கும் மினி தேர்தல்.. இப்போ தெரியும் யார் யார் எந்த பக்கம்ன்னு! | Tata Group Power Struggle: Chandrasekaran vs Noel Tata Face-Off in Crucial AGM Vote

Next Post
சந்திரசேகரன் Vs நோயல் டாடா: TATA குழுமத்தில் நடக்கும் மினி தேர்தல்.. இப்போ தெரியும் யார் யார் எந்த பக்கம்ன்னு! | Tata Group Power Struggle: Chandrasekaran vs Noel Tata Face-Off in Crucial AGM Vote

சந்திரசேகரன் Vs நோயல் டாடா: TATA குழுமத்தில் நடக்கும் மினி தேர்தல்.. இப்போ தெரியும் யார் யார் எந்த பக்கம்ன்னு! | Tata Group Power Struggle: Chandrasekaran vs Noel Tata Face-Off in Crucial AGM Vote

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin